தொழிலாளர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் எடுக்கப்படும் தீர்மானம் : பூ.பிரசாந்தன் நம்பிக்கை
தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதை நாம் ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம்.எமது கட்சியின் தலைவர் தொழிலாளர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தீர்மானம் எடுப்பார் என தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் செயலாளர் பூ.பிரசாந்தன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு கட்சி அலுவலகத்தில் இன்று (30.06.2026) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
"தொழிலாளர்களின் சேமலாப நிதியில் கை வைப்பது முறையற்றது. தொழிலாளர்களின் நிதியினை சுரண்டி நாட்டின் பொருளாதாரத்தை முன்னெடுப்பதற்கு எமது கட்சி ஒருபோதும் ஆதரவளிக்காது.

பொருளாதார நிலை மேம்படுத்தல்
அதேவேளை தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதையோ நாம் ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம். இந்நிலையில் நாட்டின் கடனை மறுசீரமைப்பதும் தேவையானது என்பதிலும் நாட்டின் பொருளாதார நிலையினை மேம்படுத்த வேண்டிய தேவையுள்ளது என்பதனையும் யாரும் மறுக்கமாட்டார்கள் என நினைக்கின்றேன்.

இதற்கமைய கடன் மறுசீரமைப்பு தொடர்பான பூரணமான அறிக்கை எதிர்வரும் நாடாளுமன்ற அமர்வில் மேற்கொள்ளப்படவுள்ளது என நினைக்கின்றேன்.
அதனை ஆராய்ந்து எமது கட்சியின் தலைவர் சி.சந்திரகாந்தன் அவர்கள் தொழிலாளர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தீர்மானம் எடுப்பார்" என தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
பிரித்தானியாவின் புதிய பிரதமராகும் ஆன்டி பர்னாம்: அவரது குடும்பம் குறித்து சில தகவல்கள் News Lankasri