யோஹானியை காண மக்கள் கூட்டம் வரவில்லை! - கொழும்பு ஊடகம் தகவல்
இலங்கையின் “மெணிகே மகே ஹிதே” பாடல் புகழ் யோஹானி டி சில்வாவின் இந்திய பயணம் தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி போலியானது என தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக இந்தியா சென்றுள்ள யோஹானியை வரவேற்பதற்காக, பல லட்சக் கணக்கான மக்கள் ஒன்று கூடியதாக செய்திகள் வெளியாகியிருந்தன.
இது குறித்து புகைப்படங்களுடன் கூடிய செய்திகள் வெளியாகியிருந்த நிலையில், அந்த செய்தி போலியானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜப்பானில் 2019ம் ஆண்டு ஏற்பட்ட சூறாவளியின் போது, அங்குள்ள விமான நிலையமொன்றில் மக்கள் ஒன்று கூடியிருந்த புகைப்படமொன்றே இவ்வாறு வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும், இந்த புகைப்படத்திலுள்ள மக்கள் கூட்டம், யோஹானியை வரவேற்பதற்காக ஒன்று கூடிய கூட்டம் எனவும், யோஹானியை வரவேற்பதற்காக பெருந்திரளானோர் வருகைத் தரவில்லை எனவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்தி...
மெனிக்கே புகழ் இலங்கை பாடகியை காண இந்தியாவில் குவிந்த நான்கரை லட்சம் ரசிகர்கள்
சூட்கேஸில் இருந்தது மனித சடலம் அல்ல: உயர் ரக செக்ஸ் பொம்மை: அவுஸ்திரேலிய பொலிஸார் விளக்கம் News Lankasri