குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இருந்து தப்பிச் செல்ல சதி செய்தவருக்கு எதிராக நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில் இருந்து தப்பிச் செல்ல சதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள 'ஹரக் கட்ட' மற்றும் நடுன் சிந்தக விக்கிரமரத்ன உள்ளிட்ட மூவருக்கு எதிராக சட்டமா அதிபர் தாக்கல் செய்த வழக்கை மீளப்பெறுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தமித் தொட்டவத்த முன்னிலையில் இன்று (27.05.2024) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இவ்வாறு .
ஒரு வருடத்திற்கும் மேலாக, குற்றம் சுமத்தப்பட்ட தரப்பினர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில் வைக்கப்பட்டிருந்தனர்.
சிவப்பு அறிவிப்பு
கடந்த ஆண்டு மார்ச் முதல் திகதி, மடகாஸ்கரில் பாதுகாப்புப் படையினரால் குறித்த இருவரும் கைது செய்யப்பட்டிருந்தனர்.
சர்வதேச பொலிஸார் வழங்கிய சிவப்பு அறிவிப்பின் பின்னர், இந்த கைது குறித்து அந்நாட்டு பொலிஸார் சர்வதேச தரப்பின் ஒத்துழைப்புடன் இலங்கைக்கு அறிவித்திருந்தனர்.
அதன்படி மடகாஸ்கர் சென்ற இரகசிய பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையின் நான்கு அதிகாரிகள் அவர்களை பொறுப்பேற்று அங்கிருந்து இந்தியா வழியாக இலங்கைக்கு அழைத்து வந்து குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |