அழுத்தங்களை தாங்க முடியாமலேயே பெருந்தோட்ட கம்பனிகள் சம்பள நிர்ணய சபையில் கலந்துகொள்ளவில்லை - இராதாகிருஷ்ணன்
அழுத்தங்களைத் தாங்கிக்கொள்ள முடியாமலேயே பெருந்தோட்ட கம்பனிகள் 19.02.2021 அன்று சம்பள நிர்ணய சபையில் இடம்பெற்ற பேச்சு வார்த்தையில் கலந்து கொள்ளவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வே.இராதாகிருஷ்ணன் ஹட்டனில் இன்று இடம்பெற்ற ஊடகச் சந்திப்பில் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், சம்பள பேச்சு வார்த்தையை இழுத்தடிப்பு செய்யும் நோக்கில் கம்பனிகள் இவ்வாறு செயற்படக்கூடும். அதாவது பேச்சு வார்த்தையை இழுத்தடிக்க கம்பனிகள் இவ்வாறு சூட்சமமான வேலைகளில் ஈடுபடுகின்றன.
அதாவது அரசாங்கத்தின் அழுத்தத்தைத் தாங்கிக்கொள்ள முடியாமல் இவ்வாறு 1000 கொடுப்பதைத் தவிர்க்க இவ்வாறு செயற்படலாம். பெருந்தோட்டங்களை இந்தியாவின் அதானி கம்பனிக்கு விற்பது என்பது வெறும் கட்டுக்கதையாகவே நான் கருதுகின்றேன்.
நான் அரசாங்கத்துடன் இணைவதாகக் கூறுவோர் அது தொடர்பான பேச்சுவார்த்தை எப்போது எனக் கூறினால் அதற்குப் பதிலளிப்பேன் . 20 ஆவது திருத்தத்திற்கு ஆதரவளித்த பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அரவிந்தகுமார் தொடர்பிலும் மலையக மக்கள் முன்னணியின் தலைவர் இங்கு கருத்து தெரிவித்துள்ளார்.
“அரவிந்தகுமார் தொடர்பில் மக்களின் தீர்மானத்திற்கு அமையவே நடவடிக்கை எடுக்கப்படும். நாம் அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்துள்ளோம். அதற்கு அவருடைய பதிலும் கிடைத்துள்ளது.
இந்த நிலையில் இந்த விடயம் குறித்து மீளப் பரிசீலனை செய்து முடிவு எடுக்கப்படும். இலங்கையில் உள்ள இரண்டு கட்சிகள் 20 ஐ ஆதரித்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்துள்ளன.
ஆகவே அது தொடர்பில் பேசாது மலையக மக்கள் முன்னணியின் உள்விவகாரத்தில் மாத்திரம் தலையிடுவது எந்த வகையில் நியாயம்? பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான போராட்டம் என்பது ஜனநாயக போராட்டமாகும்.
ஆனால் தற்போது அந்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்களை விசாரிப்பது மக்கள் போராட்டத்தை நிராகரிப்பதாகும். அமைச்சர் விமல் வீரவங்க அரசாங்கத்திற்கு உள்ளேயே இருந்து கொண்டு அரசாங்கத்தை விமர்சிப்பது ஒரு நாடகமாகும். மேலும் இந்தியாவைப் பகைத்துக்கொண்டு ஏனைய நாடுகளுடன் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்வது ஆபத்தானது.
ஆகவே நண்பனைப் பகைத்துக்கொண்டு செயற்படுவதை மாற்றிக்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.





யாழ்ப்பாணமே நீ குடிப்பது நல்ல தண்ணியா 14 மணி நேரம் முன்

நெருக்கமானவர் உடன் Vacation சென்றுள்ள அய்யனார் துணை சீரியல் நடிகை மதுமிதா.. புகைப்படங்கள் இதோ Cineulagam
