மத்திய வங்கியின் அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்துள்ளது
கடந்த ஜூலை மாதம் இறுதியில் இலங்கை மத்திய வங்கியின் கையிருப்பில் இருந்த அந்நிய செலாவணி 2 ஆயிரத்து 364 மில்லியன் டொலர்களாக குறைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
கடந்த ஜூன் மாதம் மத்திய வங்கியிடம் 3 ஆயிரத்து 599.2 மில்லியன் டொலர்கள் கையிருப்பில் இருந்தது.
கடந்த ஜூலை 27 ஆம் திகதி காலம் முடிவடைந்த வெளிநாட்டு பிணை முறிகளை மீள செலுத்திய பின்னர், அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்துள்ளது.
எவ்வாறாயினும் அடுத்த மூன்று மாதங்களுக்குள் மேலும் 2 ஆயிரத்து 650 மில்லியன் டொலர்கள் நாட்டுக்கு கிடைக்கும் என நிதி ராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
அதேவேளை கடந்த ஜூலை மாதம் இறுதியில் இலங்கை மத்திய வங்கியிடம் 2 ஆயிரத்து 833.5 மில்லியன் டொலர் பெறுமதியான தங்கம் கையிருப்பில் இருந்துள்ளது.
தற்போதைய அரசாங்கம் பதவிக்கு வந்த கடந்த 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம், இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பானத 7 ஆயிரத்த 500 மில்லியன் டொலர்களாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் ரூ.4,000 கோடியை செலவிட்ட இந்திய சுற்றுலாப் பயணிகள் News Lankasri
