சுமந்திரனுக்கு இரண்டு தெரிவுகளே உண்டு: விமர்சனத்துக்கு எதிராக வழக்கு தாக்கல்
தமிழரசுக் கட்சியின் நிலைப்பாடு தொடர்பில் தன்னை விமர்சித்த பத்திரிகையாளர் ஒருவருக்கு எதிராக நீதிமன்றில் முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ சுமந்திரன்(M. A. Sumanthiran) சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை தமிழரசுக் கட்சி தேசிய மாநாடு தொடர்பிலான வழக்கு விசாரணை இன்றைய தினம் திருகோணமலை நீதிமன்றில் இடம்பெற்றது.
இந்நிலையில் வழக்கின் முடிவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை கூறியுள்ளார்.
மேலும், தமிழரசுக் கட்சியின் நிலைப்பாடு தொடர்பில் எனது ஆட்சேபனையை நான் முன்னதாகவே நீதிமன்றுக்கு அறிவித்துவிட்டேன்.
எதிராளி வழக்கு தரப்பினரின் நிலைப்பாடு தொடர்பிலான விசாரணைக்கு எதிர்வரும் ஏப்ரல் 24ஆம் திகதிக்கு வழக்கு தவணையிடப்பட்டுள்ளது.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நிர்வாகத்துக்கு எதிராக அதன் உறுப்பினர் ஒருவர் தாக்கல் செய்த வழக்கில் எம்.ஏ.சுமந்திரன் எம்.பி. தவிர்ந்த ஏனைய எதிராளிகள் அறுவரும், தங்களின் ஆட்சேபனைகளை எழுத்தில் சமர்ப்பிப்பதற்காக கால அவகாசம் கோரியமையை அடுத்து எதிர்வரும் 24 ஆம் திகதி வழக்கை நீதிமன்றம் ஒத்திவைத்ததுள்ளது.
திருகோணமலை மாவட்ட நீதிபதி மா.கணேசராஜா முன்னிலையில் இந்த வழக்கு இன்று எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, ஏழு எதிராளிகளில் ஒருவரான சுமந்திரன் தமது தரப்பு ஆட்சேபனைச் சமர்ப்பணங்களை எழுத்தில் சமர்ப்பித்தார். ஏனைய எதிராளிகள் தமது ஆட்சேபனை சமர்ப்பணங்களை சமர்ப்பிக்காத நிலையில் தாங்களும் அதனை முன்வைப்பதற்குக் கால அவகாசம் கோரினர்.
அதற்கு அவகாசம் வழங்கி வழக்கை 24ஆம் திகதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார். இந்த வழக்கு இன்று எடுத்துக்கொள்ளப்பட்ட போது எதிராளியான சுமந்திரன் முதல் தடவையாக நீதிமன்றில் முன்னிலையானார்.
அவர் தமக்காகத் தாமே சமர்ப்பணம் செய்தார். கடந்த 17ஆம் திகதி வவுனியாவில் நடைபெற்ற கட்சியின் அரசியல் குழு, கட்சியின் நிலைப்பாட்டை நீதிமன்றத்தில் வெளிப்படுத்தும்படி தம்மை வழிப்படுத்தி இருப்பதால் அதன் அடிப்படையில் தான் இந்த ஆட்சேபனைச் சமர்ப்பணங்களை முன் வைக்கின்றார் என சுமந்திரன் தெரிவித்தார்.
வழக்காளி கட்சி மீது சுமத்திய குற்றச்சாட்டுகளையும் தவறுகளையும் அப்படியே ஏற்றுக்கொள்வது கட்சியின் முடிவல்ல என்பதையும், கட்சியின் உண்மையான நிலைப்பாட்டை தெளிவுபடுத்தும்படி அரசியல் குழு தன்னை வழிப்படுத்தி இருக்கின்றது என்றும் சுமந்திரன் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
வழக்காளியின் குற்றச்சாட்டுகளையோ, அவர் கோரிய நிவாரணங்களையோ தம்மால் முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாது என்று குறிப்பிட்ட சுமந்திரன், வழக்கை விரைந்து முடிப்பதற்காக எல்லாவற்றையும் தவறு என்று ஏற்றுக்கொள்ளும் சில எதிராளிகளின் நிலைப்பாடு கட்சியினுடைய நிலைப்பாடு அல்ல என்றும், அதனால்தான் பல விடயங்களைத் தெளிவுபடுத்தித் தான் ஆட்சேபனைச் சமர்ப்பணமாக முன் வைத்துள்ளார் என்றும் சுமந்திரன் கூறியள்ளார்.
இதே நேரம் வழக்கு இன்று எடுத்துக்கொள்ளப்பட்டபோது தமிழரசு கட்சியின் மத்திய குழு உறுப்பினரான செல்லையா இரத்தினவடிவேல் தமது சட்டத்தரணி ஊடாக விண்ணப்பம் ஒன்றைச் சமர்ப்பித்தார்.
இந்த வழக்கில் கட்சியினர் நேரடியாக இணைய முடியும் என்ற நீதிமன்ற அறிவுறுத்தலுக்கு அமைய தம்மையும் இந்த வழக்கில் ஒரு தரப்பாகச் சேர்த்துக் கொள்ளும்படி அவர் கோரியுள்ளார்
கட்சி சார்ந்த பொது நலன் வழக்கு என்பதால் கட்சி உறுப்பினர் ஒருவர் வழக்கில் இணைவதைத் தாம் ஆட்சேபிக்கவில்லை என்றும் சுமந்திரன் குறிப்பிட்டார்.
இந்நிலையில், வழக்காளியும், ஏனைய எதிராளிகளும் இந்த உறுப்பினரின் விண்ணப்பம் தொடர்பில்
ஆட்சேபனை ஏதும் தங்களுக்கு இருக்குமாயின் அதனைத் தெரிவிப்பதற்கு கால அவகாசம்
கோரியதனால் அதற்கும் 24ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |