ரிஷாட் வீட்டுக்கு 11 யுவதிகளை அழைத்து வந்த தரகர்
முன்னாள் அமைச்சர் ரிஷார்ட் பதியூதீனின் வீட்டில் பணியாற்றிய நிலையில் உயிரிழந்த சிறுதி தொடர்பிலான விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றன. காவல்துறை குழு ஒன்று டயகம பிரதேசத்திற்குச் சென்று வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
குறித்த சிறுமி உள்ளிட்ட 11 பெண்கள் அல்லது வீட்டு வேலை உதவியாலர்கள் குறித்த தரகரால் ரிஷார்ட்டின் வீட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். அவர்களிடம் வாக்கு மூலம் பதிவு செய்யும் நோக்கிலேயே இந்த குழு அங்கு விரைந்துள்ளது.
அதனைவிட சிறுமியின் சடலத்தை மீண்டும் தோண்டியெடுத்து, பிரேத பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
குறிப்பாக மரணத்திற்கான காரணம், அதனைவிட சிறுமி நீண்டகாலமாக துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ள விடயம், கொடுமைகளுக்கு உள்ளான விடயம் போன்றன குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
அதனைவிட இதற்கு முன்னதாக இந்த வீட்டில் பணியாற்றியவர்கள் ஏதாவது துஷ்பிரயோகத்திற்கு அல்லது பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளார்களா என்பது தொடர்பிலும், மனித விற்பனை குறித்தும் விரிவான விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன என குறிப்பிட்டுள்ளார்.
லண்டனில் 36வது மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்த இந்திய குடும்பம்., சம்பவம் குறித்து வெளியான தகவல் News Lankasri
துரோகம் செய்தவர்கள் மீதும் அன்பு செலுத்தும் குணம் கொண்ட டாப் 3 ராசிகள் ... இவர்கள் கிடைப்பதே வரம்! Manithan
இயக்குநர் இமயம் சரிந்தது.. உடல்நலக்குறைவால் காலமானார் இயக்குநர் பாரதிராஜா.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam