ஒரு மாதமாக தேடப்பட்டு வந்த சிறுவர்கள் மீரிகம பகுதியில் இருந்து மீட்பு
கொடதெனயாவ பிரதேசத்தில் காணாமல் போன இரு சிறுவர்களும் ஒரு மாதத்திற்கு பின்னர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் இருவரும் மீரிகம நகரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த நவம்பர் 24 ஆம் திகதி 10 மற்றும் 12 வயதுகளுடைய இவ்விரு சிறுவர்களும் காணாமல் போனமை தொடர்பில் கொடதெனியாவ பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
பின்னர் மேற்படி சிறுவர்கள் கண்டுபிடிக்கப்படாத நிலையில், அவர்களைத் தேடும் பணி குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
காணாமல் போன சிறுவர்கள் தொடர்பில் அவர்களின் தாய் முரணான கருத்துக்களை வெளியிட்டிருந்ததுடன், பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிப்பதை அவர்கள் தவிர்த்து வந்தனர்.
இந்நிலையில், மீரிகமவில் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு சிறுவர்களினதும் அடையாளங்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.





அவர் பிரதமரானால் நான் இந்தியாவுக்குச் சென்றுவிடுவேன்... கூறும் தொலைக்காட்சி பிரபலம்: யார் அந்தப் பெண்? News Lankasri

CM சார் என்ன பழிவாங்கனுமா? என்னை என்னவேணும்னாலும் பண்ணுங்க! அதிரடியாக விஜய் வெளியிட்ட வீடியோ Cineulagam
