ராகமை வைத்தியசாலையில் காணாமல் போன தமிழ் பெண்ணின் சடலம்! விசாரணைகள் தீவிரம்
ராகமை வைத்தியசாலையில் உயிரிழந்த வயோதிப பெண்ணொருவருடைய சடலம் காணாமல் போயுள்ள நிலையில், அது குறித்து வைத்தியசாலை நிர்வாகத்தினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வத்தளை − ஹுனுபிட்டி பகுதியைச் சேர்ந்த 71 வயதான அழகேசன் சிவகாமி என்ற பெண்ணின் சடலமே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படடுள்ளது.
கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த செய்தியில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“குறித்த பெண் ராகமை வைத்தியசாலையின் 30வது வாட்டில் கடந்த 12ம் திகதி அனுமதிக்கப்பட்டிருந்தார்.
குறித்த பெண்ணை பார்ப்பதற்காக 13ம் திகதி அவரது மகன் வைத்தியசாலைக்கு சென்ற வேளையில், அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை அதிகாரிகளினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து, சடலத்தை பொறுப்பேற்பதற்காக அவரது மகன் சென்ற வேளையில், அவரிடம் பெண்ணொருவரின் சடலம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
எனினும், குறித்த சடலம் தன்னுடைய தாயினுடையது அல்லவென கூறிய மகன், அந்த சடலத்தை பொறுப்பேற்க மறுத்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து, ராகமை வைத்தியசாலையில் உயிரிழந்த நிலையில், உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட சடலங்கள் தொடர்பில் ஆராய்ந்த போதிலும், குறித்த பெண்ணின் சடலத்தை கண்டுபிடிக்க முடியவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
சடலம் இதுவரை கண்டுபிடிக்கப்படாத நிலையில், வைத்தியசாலை நிர்வாகத்தினர் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.





பெண்கள் பதிலடி கொடுத்தும் அடங்காத குணசேகரன், தர்ஷனுக்கு வைத்த செக்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam

உயிருக்கு பதில் உயிர்தான் வேண்டும்: கேரள செவிலியர் வழக்கில் ஏமன் குடும்பம் வலியுறுத்தல் News Lankasri
