நிபுணர்கள் குழுவின் பரிந்துரைக்கு அமைய கோவிட் சடலங்களை அடக்கம் செய்ய முடியும் எனக் கூறினேன்! - பிரதமர்
சுகாதார அமைச்சு நியமித்த நிபுணர்கள் குழுவின் பரிந்துரைகளுக்கு அமையவே கோவிட்டால் உயிரிழக்கும் முஸ்லிம் மக்களின் ஜனாஸாக்களை அடக்க செய்ய முடியும் என தான் கூறியதாக பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நிபுணர்கள் குழுவின் தலைவர் கலாநிதி ஜெனிபர் பெரேரா கூறுவது போல் கொரோனாவால் இறப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்யவும் தகனம் செய்யவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதா என செய்தியாளர்கள் பிரதமரிடம் கேள்வி எழுப்பினர்.
இதனை உறுதிப்படுத்தியுள்ள பிரதமர், சடலங்களை அடக்கம் செய்ய விரும்புவோர் அதனை செய்ய முடியும் என குறிப்பிட்டுள்ளார்.
எனினும் இதனை விரும்பியவாறு செய்ய முடியாது.
இந்த பரிந்துரைகளை வழங்கிய நிபுணர்கள் குழுவினர், அதனை மேற்கொள்ளும் விதம் தொடர்பான விதிமுறைகளை உருவாக்க வேண்டும் எனவும் பிரதமர் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.



