மூன்று வருடங்களின் பின்னர் ஏற்பட்டுள்ள மிகப் பெரிய விலை அதிகரிப்பு! டிசம்பர் வரை நீடிக்கும் சாத்தியம்
2018ஆம் ஆண்டின் பின்னர் சில மரக்கறிகளுக்கான விலைகளில் மிகப் பெரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவகத்தின் உணவுக் கட்டமைப்பு மற்றும் விற்பனை ஆய்வுப் பிரிவின் பிரதானி நாலக்க விஜேசூரிய இதனை அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
வருடாந்தம் மே மற்றும் ஜுன் மாதங்களில் சந்தையில் மரக்கறிகளின் விலைகள் அதிகரித்து காணப்படுவதுடன், ஒகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் விலைகள் வீழ்ச்சியடையும்.
எனினும், மே மற்றும் ஜுன் மாதங்களில் நிலவும் விலையே, ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் உள்ளது. நிலவும் மழையுடனான வானிலை, பயிரிடப்படும் நிலத்தின் அளவு குறைவடைந்தமை மற்றும் பூச்சிக் கொல்லிகளுக்கான தட்டுப்பாடு என்பன இந்த விலை அதிகரிப்புக்கு காரணமாகும்.
இந்த விலை அதிகரிப்பானது எதிர்வரும் டிசம்பர் மாதம் நடுப்பகுதி வரையில் தொடரும் என அவர் குறிப்பிட்டார்.

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 3 நாட்கள் முன்

சிறந்த அப்பாவுக்கு உதாரணமாக திகழும் ஆண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

பாக்ஸ் ஆபிஸில் குறையும் DD Next Level படத்தின் வசூல்.. சந்தானத்திற்கு இப்படியொரு நிலைமையா Cineulagam
