வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு சுற்றுலா மேற்கொள்ள முடியுமா?
இலங்கையில், ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது, ஆனால் விமான நிலையங்கள் மூடப்படவில்லை. ஆகவே வெளிநாட்டு சுற்றுலாப்பிரயாணிகள் நாட்டுக்கு வருகை தரலாம் என சுற்றுலாத்துறை சேவை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
இந்திய நாட்டு சுற்றுலாப்பிரயாணிகள் இலங்கைக்கு சுற்றுலாபிரயாணத்தை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தடுப்பூசிகள் இரண்டடையும் பெற்றுக் கொண்ட இந்திய சுற்றுலாப்பயணிகள் இலங்கைக்கு வருகை தரலாம், சமூகத்துடன் தொடர்புக் கொள்ளலாம். ஏனைய நாட்டு பயணிகளும் இலங்கைக்கு வருகை தரலாம்.
நாட்டுக்கு வருகை தந்ததன் பின்னர் பி. சி. ஆர் பரிசோதனை எடுக்கப்படும். பரிசோதனையின் பெறுபேற்றில் வைரஸ் தொற்று இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டதன் பின்னரே அவர்கள் சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள அனுமதி வழங்கப்படும்.
22 சுற்றுலா மையங்கள் விசேடமாக தெரிவு செய்யப்பட்டுள்ளன. நாட்டுக்கு வருகை தரும் சுற்றுலா பிரயாணிகள் சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களுக்கு அமையவே செயற்பட வேண்டும்.
சுற்றுலாப்பிரயாணிகள் தங்குமிடம், மற்றும் சுற்றுலாபயணங்கள் மேற்கொள்ளும் இடங்கள் ஆகியவை முழுமையாக கண்காணிக்கப்படும். சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களுக்கு அமைய சுற்றுலாத்துறை சேவையினை முன்னெடுத்து செல்வது கட்டாயமாகும் என குறிப்பிட்டுள்ளார்.