சிங்கள பேரினவாதிகளின் செயற்பாட்டினால் கோரப்பட்ட தமிழீழம்
தனி நாடு கோரி ஒரு இனம் போராடிய வரலாற்றை இந்த நாடு கொண்டுள்ளது என்றும், நாட்டில் உள்ள சிங்கள பேரினவாதிகளுடன் வாழ முடியாது என தமிழீழத்துக்காக அந்த இனம் பல உயிர்களை வழங்கியுள்ளதாகவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீன் கடுமையாக உரையாற்றியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று(21) இடம்பெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர்,
மண்ணுக்கான போராட்டம்
“தமிழீழத்துக்கான மற்றும், தமது மண்ணுக்கான போராடி உயிரிழந்த இனத்தின் வரலாற்றை இந்த நாடு கொண்டுள்ளது. சயனைட் குப்பிகளை அணிந்துக்கொண்ட போராட்டமது.
30000 தொடக்கம் 40000 மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். தமிழர்களும், சிங்களவர்களும், இராணுவத்தினரும் இதில்கொல்லப்பட்டுள்ளனர். அப்பாவி முஸ்லீம் மக்கள் அகதிகளாக்கப்பட்டனர்.
இதனை மறந்து இன்று நாடாளுமன்றில் நீங்கள்(ஆளும் தரப்பு) பேசலாம். ஆனால் மக்களினுடைய வேதனைகள் உள்ளங்களில் இருந்துக்கொண்டே இருக்கின்றன.
மேலும், இதுவரையில் பண்முகப்படுத்தப்பட்ட நிதி தொடர்பில் எந்த விதமான அறிக்கையும் எங்களுக்கு கிடைக்கவில்லை. நாங்களும் மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்களே.
சபாநாயகர் பதவி
மக்களுக்கான சேவையை செய்யவேண்டிய தேவை எமக்கும் உள்ளது. அப்படியென்றால் எதிர்கட்சியை பக்கசார்பாக பார்ப்பது நியாயம் இல்லாத ஒன்று.
அதேபோல நாடாளுமன்ற உறுப்பினர்களினுடைய பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கம் அசமந்தமாக செயற்படுகிறது. பாதுகாப்பு இந்த நாட்டில் சீராக இருந்தால் பயமில்லை.
ஆனால் நமது நாட்டில் சாதாரண மக்களும் கொல்லப்படுகின்றனர். நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யவேண்டிய பொறுப்பு சபாநாயகருக்கு இருக்கிறது.
ஆனால் சபாநாயகரோ ஒரு பொம்மைபோல இருக்கின்றார். ஒருநாள் கூட எதிர்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்துக்களை கேட்காத சபாநாயகரை முதன் முதலாக நாங்கள் காண்கின்றோம்.
24 ஆண்டுகளாக நாடாளுமன்றில் இருந்தும் இப்படிபட்ட ஒரு பொம்மை, சபாநாயகராக பதவி வகிக்கவில்லை” என கடும் தொனியில் கருத்து தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 3 நாட்கள் முன்

Siragadikka Aasai: சீதாவின் காதலரை நேருக்கு நேர் சந்தித்த முத்து... அடுத்து நடக்கப்போவது என்ன? Manithan

viral video: ரெட்டிகுலேட்டட் மலைப்பாம்புக்கு அருகில் அசால்ட்டாக சாக்லேட் சாப்பிடும் குழந்தை! Manithan
