பாடசாலைகளுக்கு சமூகமளித்த அனைவருக்கும் நன்றிகள்! - கல்வி அமைச்சர்

Education School Dinesh Gunawardena COVID 19
By Murali Oct 22, 2021 01:11 AM GMT
Report

பெரும்பாலான ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பங்களிப்புடன் நாடுபூராகவும் நேற்றைய தினம் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டன.

இந்நிலையில், தமது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பிய பெற்றோருக்கும் அந்த பிள்ளைகளின் சார்பாக பாடசாலைகளுக்கு சமூகமளித்த அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் கல்வி அமைச்சின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்வதாக கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன (Dinesh Gunawardena) தெரிவித்தார்.

மஹரகம பௌத்த பாடசாலை உள்ளிட்ட பல பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைளை பார்வையிட்ட அமைச்சர் அதன் பின்னர், கல்வி அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.

இதுதொடர்பாக மேலும் தெரிவித்த அமைச்சர்,

"இன்றைய (21.10.2021) தினம் பெரும்பாலான ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பங்களிப்புடன் நாடு முழுவதும் சுகாதார வழிகாட்டுதல்களுக்கு அமைவாக பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டன.

பெற்றோர்கள் மிக ஆர்வத்துடன் தங்கள் பிள்ளைகளை பாடசாலைக்கு அழைத்து வந்திருந்தனர். மாணவர்களுக்கு வேண்டி அனைத்து பாடசாலைகளையும் படிப்படியாக ஆரம்பிப்பதற்கு நாம் நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.

இந்த நாட்டின் இலட்சக்கணக்கான பாடசாலை மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கும் பணி வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளமை மகிழ்ச்சி அளிக்கிறது. கோவிட் தொற்று பரவல் காரணமாக நீண்டகாலமாக பாடசாலைகளை நடத்துவதற்கு முடியாமல் இருந்த காலம் இன்றுடன் முடிவடைந்துள்ளது.

ஆயிரக்கணக்கான மாணவர்கள் தமது பெற்றோர்களுடன் நாடு பூராகவும் உள்ள பாடசாலைகளுக்கும் வருகை தந்ததையிட்டு கல்வி அமைச்சின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.

அத்துடன் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் தமது பாடசாலைக்கு சமூகமளித்து இந்த பொறுப்பை நிறைவேற்றி மாணவர்களின் இலவசக் கல்வியின் அபிலாஷைகளை அடைவதில் நாட்டின் எதிர்கால தலைமுறைக்கு அவர்கள் அளப்பரிய பங்களிப்பை வழங்கியதற்காக மீண்டும் மீண்டும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்." என்றும் அவர் தெரிவித்தார்.

2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US