கொழும்பில் இரவில் ஏற்பட்ட பதற்ற நிலை : கடும் கோபத்தில் பயணிகள்
கொழும்பு, கொள்ளுப்பிட்டி தொடருந்து நிலையத்தில் நேற்று இரவு பயணிகளின் செயற்பாட்டால் பதற்றமான சூழ்நிலை ஒன்று ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காலி நோக்கி செல்லும் இரவுநேர தபால் தொடருந்து பழுதடைந்ததால், கடலோரப் பாதையில் தொடருந்து சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
குழப்ப நிலை
கொள்ளுப்பிட்டிக்கும் பம்பலப்பிட்டிக்கும் இடையில் தொடருந்து பழுதடைந்துள்ளது. இதனால், மேலும் இரண்டு தொடருந்துகள் அந்தப் பாதையால் பயணிப்பதில் தாமதமாகின.

இந்த நிலையில் சம்பவ இடத்தில் பயணிகள் ஆக்ரோஷமாக செயற்பட்டமையினால் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.
பயணிகளின் கடும் கோபத்தினால் அச்சமடைந்த என்ஜின் ஓட்டுநரும் உதவியாளரும் என்ஜின் அறைக்குள் நுழைந்து தங்களை தாங்களே பூட்டிக் கொண்டுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு பொலிஸார் அழைக்கப்பட்டு நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
அணையா விடுதலைத்தீ சங்கரின் சாவு எப்படி வீரசரித்திரமானது.. 10 மணி நேரம் முன்
மரணத்தைக் கண்டேன்..இயேசுவை சந்தித்த பின் காப்பாற்றப்பட்டேன் - ஐரிஷ் வீரரின் பதிவு வைரல் News Lankasri
பள்ளி செல்லும் அகதிப் பிள்ளைகளை தங்கள் நாட்டுக்கு போகும்படி கூறுவதால் உருவாகியுள்ள கலக்கம் News Lankasri
விசா நிராகரிப்பால் உயிரைவிட்ட இந்திய மருத்துவர்! சிதைந்த அமெரிக்க கனவு..சிக்கிய கடிதம் News Lankasri