கோட்டாபயவின் வீட்டிற்கு அருகில் குவிக்கப்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொலிஸ் மற்றும் இராணுவத்தினர்
“கோ ஹோம் கோட்டா” போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு ஒரு வருடம் பூர்த்தியானதையொட்டி மீரிஹான பகுதியில் வெள்ளிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நினைவுப் போராட்டத்தால் அந்தப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டிருந்தது.
நேற்று (31.03.2023) மாலை போராட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், அதன் முன்னணி செயற்பாட்டாளர்களான டானிஸ் அலி உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டதை தொடர்ந்தே அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இவர்கள் பலவந்தமாக கடத்தப்பட்டதாக தெரிவித்து, போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தவர்கள் பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால் குறித்தப் பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொலிஸாரும், இராணுவத்தினரும் குவிக்கப்பட்டிருந்ததுடன், கோட்டாபய ராஜபக்சவின் வீட்டிற்கு செல்லும் வீதியில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
இது உள்ளிட்ட இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,