தற்காலிக போர் நிறுத்தம்! மீட்புபணிகளுக்கு மத்தியில் மியன்மார் அரசின் முக்கிய நடவடிக்கை
மியான்மரில் நிலவிவரும் இராணுவ ஆட்சிக்கு மத்தியல் தற்காலிக போர் நிறுத்த அறிவிப்பை அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.
மியான்மார் மற்றும் தாய்லாந்தில் கடந்த வெள்ளியன்று (மார்ச் 28) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
மியான்மரின் சகாய்ங் நகரின் வடமேற்கே 16 கி.மீ. தொலைவில் பகல் 12 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
மீட்புப் பணி
இது ரிக்டரில் 7.7 புள்ளியாகப் பதிவானதைத் தொடர்ந்து, மீண்டும் 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இரு நிலநடுக்கங்கள் தொடர்ந்து ஏற்பட்டதால் மியான்மரில் பல நகரங்கள் பெரும் பாதிப்புகளைச் சந்தித்துள்ளன. பல கட்டடங்கள் இடிந்து விழுந்த நிலையில், பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணி 5ஆவது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
மியான்மர் நாட்டில் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள வீரர்களுக்கு உதவ பல நாடுகளும் தமது இராணுவ வீரர்களை அனுப்பி வைத்துள்ளன.
இவர்கள் அங்குள்ள வீரர்களுடன் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தற்காலிக போர் நிறுத்தம்
இந்த நிலையில், நிலநடுக்கத்தால் பலியானோர் எண்ணிக்கை 3,000-ஐ தாண்டியதாக மியான்மர் செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
மியான்மரில் 4 ஆண்டுகளாக இராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது.
அங்கு, கடந்த 2020இல் ஆட்சிக் கவிழ்ப்பு நடந்ததைத் தொடர்ந்து இராணுவத்தினருக்கும் உள்நாட்டு கிளர்ச்சியாளர்களுக்கும் போர் நடைபெற்று வருகின்றது.
இந்த நிலையில், நாட்டின் சுகாதார உள்கட்டமைப்பு மிகவும் மோசமானதால் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகளைச் சமாளிக்க சிரமம் ஏற்பட்டுள்ளது.
இதனால், மியான்மரில் ஆளும் இராணுவ அரசு மீட்புப் பணிகளைத் தீவிரப்படுத்த ஆயுதமேந்திய கிளர்ச்சியாளர்கள் குழுக்களுக்கு எதிராக தற்காலிக போர் நிறுத்த அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 23ம் நாள் காலை இரதோற்சவம்





பிரித்தானியாவில் மகன் பிறந்து.,இரண்டு மாதங்களில் மாயமான 28 வயது தந்தை: காத்திருந்த அதிர்ச்சி News Lankasri

திருப்பதி வெங்கடேஸ்வரர் அருள்தான் காரணம் - 121 கிலோ தங்கத்தை காணிக்கையாக செலுத்திய NRI News Lankasri

தர்ஷனை வழிக்கு கொண்டு வர அறிவுக்கரசி போட்ட பிளான், அதிர்ச்சியான குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
