தமிழ்த் தேசியத் தரப்பினருக்கு ரெலோ விடுத்துள்ள கோரிக்கை

United Nations Tamils Sri Lanka Presidential Election 2024
By Kajinthan Aug 29, 2024 04:17 AM GMT
Report

நடைபெற இருக்கும் ஜனாதிபதித் தேர்தல் பரபரப்புக்களில் தமிழ் மக்களின் பிரதான விடயமான ஐ.நா அமர்வுகளைப் புறந்தள்ளி விட வேண்டாம் என ரெலோ கோரிக்கை விடுத்துள்ளது.

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் ஐ.நா மனித உரிமைப் பேரவையின் 57 ஆவது அமர்வு நடைபெற இருக்கும் இவ்வேளையில் ஐ.நா மனித உரிமை உயர்ஸ்தானிகரின் அறிக்கை மனித உரிமைப் பேரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அலி சாஹிர் மௌலானாவின் வெளியேற்றத்திற்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட தடையுத்தரவு

அலி சாஹிர் மௌலானாவின் வெளியேற்றத்திற்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட தடையுத்தரவு

பொறுப்புக் கூறல் விடயங்கள்

இந்நிலையில், தமிழீழ விடுதலை இயக்கம் தரப்பில் உயர்ஸ்தானிகர் அலுவலகத்துக்கு சமர்ப்பிப்பதற்கான அறிக்கையின் மாதிரி வடிவம் அனைத்து கட்சி தலைவர்களுக்கும் பல நாட்களுக்கு முன்னர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என ரெலோவின் ஊடகப் பேச்சாளர் கு. சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியத் தரப்பினருக்கு ரெலோ விடுத்துள்ள கோரிக்கை | Telo S Request To The Tamil National Party

கடந்த வாரம் உயர்ஸ்தானிகராலய அலுவலர்களுடன் இணையவழியில் நடைபெற்ற சந்திப்பில் ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன்,  ரெலோ பேச்சாளர் குருசுவாமி சுரேந்திரன் மற்றும் பிரான்ஸிலிருந்து ஏற்பாட்டாளர் மகேந்திரன் குலராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

சில காரணங்களினால் மற்ற கட்சித் தலைவர்கள் கலந்து கொள்ள முடியவில்லை. இருப்பினும் சந்திப்பில் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் உட்பட கலந்து கொண்டவர்கள் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக் கூறல் விடயங்களின் தற்போதைய நிலை, தொடர்ந்தும் மீறப்பட்டு வரும் மனித உரிமை விடயங்கள் பற்றி விரிவாக எடுத்துரைத்தனர்.

மனித உரிமைப் பேரவைக்கு சமர்பிக்க தயாராகி இருந்த ஐ.நா மனித உரிமை உயர்ஸ்தானிகரின் அறிக்கையும் அதில் கலந்துரையாடப்பட்டது.

எனினும், எதிர்வரும் மனித உரிமைப் பேரவையின் அமர்வுக்கு முதலாக எமது தரப்பு அறிக்கை சமர்ப்பிக்கப்படுவது மிகவும் அவசியமாகும் என அவர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி தேர்தல் விடயங்கள்

நல்லிணக்கம் மற்றும் பொறப்புக்கூறல் சம்பந்தமாக இலங்கை அரசாங்கத்தின் மெத்தனப் போக்கும் அதனால் தமிழ் மக்கள் தொடர்ந்தும் எதிர்கொண்டு வரும் பிரச்சினைகளையும் சர்வதேசத்துக்கு சொல்வதற்கு நாங்கள் பல்வேறு முயற்சிகளை எடுத்துள்ளோம்.

தமிழ்த் தேசியத் தரப்பினருக்கு ரெலோ விடுத்துள்ள கோரிக்கை | Telo S Request To The Tamil National Party

அதில் பொது வேட்பாளரும் ஒரு பொறிமுறையாக கையாளப்படுகிறது. இந்த நேரத்தில் மனித உரிமை பேரவையின் 57 ஆவது கூட்டத் தொடர் எமது பிரச்சினைகளை எடுத்துச் சொல்வதற்கான மிகப் பிரதான தளமாக அமைந்திருக்கிறது.

சர்வதேச நாடுகள் பொறுப்புக் கூறல் மற்றுமை நல்லிணக்கம் சம்பந்தமாக இலங்கை அரசாங்கத்தின் மீது அழுத்தங்களைப் பிரயோகிக்கின்ற மனித உரிமைப் பேரவையின் கூட்டத் தொடரை ஜனாதிபதி தேர்தல் விடயங்களினால் நாம் மறந்து விடல் ஆகாது.

தமிழ்த் தேசியப் பரப்பு

யுத்தக் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள், மனிதத்துக்கு எதிரான குற்றங்கள் ஆகியவற்றோடு எமது வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான நீதியைப் பெற்றுக்கொள்ள ஐ.நா பொறிமுறை மற்றும் மனித உரிமை பேரவையின் நடவடிக்கைகளில் மனந்தளராது தொடர்ந்தும் நம்பிக்கை கொண்டு காத்திருக்கும் எமது மக்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேற எமது காத்திரமான தொடர் நடவடிக்கைகள் அவசியமாகும்.

தமிழ்த் தேசியத் தரப்பினருக்கு ரெலோ விடுத்துள்ள கோரிக்கை | Telo S Request To The Tamil National Party

மிகக் கடினமான தேர்தல் விடயங்களை கையாளும் பொழுதிலும் எமது இன நலன் சார்ந்த பிரதானமான ஐ.நா மனித உரிமைப் பேரவை கூட்டத் தொடரில் எமது மக்கள் சார்பாக அறிக்கைகள் இடம்பெறுவது தேர்தல் நலன்களையும் தாண்டி முக்கியமானதாகும்.

ஆகவே அனைத்துத் தமிழ்த் தேசியப் பரப்பிலும் பணியாற்றிக் கொண்டிருக்கும் அரசியல் கட்சிகள், பொது அமைப்புகள் ஆகியோரை இந்த பேரவை கூட்டத் தொடருக்கான அறிக்கை சமர்ப்பிக்கும் எமது முயற்சியில் கைகோர்க்குமாறு வினயமாக வேண்டுகிறோம் என்றும் ரெலோவின் ஊடகப் பேச்சாளர் கு. சுரேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

போலி விஸ்கி மதுபான உற்பத்தி நிலையம் சுற்றிவளைப்பு

போலி விஸ்கி மதுபான உற்பத்தி நிலையம் சுற்றிவளைப்பு

பல பில்லியன் டொலரை இழக்க போகும் இலங்கை! விடுக்கப்பட்டுள்ள பகிரங்க எச்சரிக்கை

பல பில்லியன் டொலரை இழக்க போகும் இலங்கை! விடுக்கப்பட்டுள்ள பகிரங்க எச்சரிக்கை

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, சிலாபம், கொழும்பு, St. Gallen, Switzerland

07 May, 2022
11ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Drancy, France

08 May, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புத்தூர் மேற்கு, Toronto, Canada

09 Apr, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Aubervilliers, France

04 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

நுணாவில், Mount Alberta, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்

கல்மடு, ஈச்சங்குளம், பரிஸ், France

05 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
மரண அறிவித்தல்

திருவல்லிக்கேணி, India

03 May, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US