இலங்கையில் களவாடப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான கையடக்க தொலைபேசிகள்
இலங்கையில் கடந்த இரண்டு மாத காலப் பகுதியில் 8422 கையடக்க தொலைபேசிகள் களவாடப்பட்டுள்ளன.
இலங்கை தொலைதொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.
காணாமல் போகும் தொலைபேசிகளை கண்டறியும் நோக்கில் 2018ஆம் ஆண்டு முதல் பொலிஸார் விசேட திட்டமொன்றை அறிமுகம் செய்திருந்தனர்.
தொலைபேசிகள் காணாமல்போன சம்பவங்கள்
இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது முதல் இதுவரையில் ஆணைக்குழுவிற்கு தொலைபேசி காணாமல்போன சம்பவங்கள் தொடர்பில் 134,451 முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கடந்த 2021ஆம் ஆண்டில் சுமார் 28,000 தொலைபேசிகள் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

மிகவும் ஆபத்தானவர், நெருங்க வேண்டாம்: தீவிரமாக தேடப்படும் தமிழர் தொடர்பில் லண்டன் பொலிசார் எச்சரிக்கை News Lankasri

இது ரகசியமாக இருக்கட்டும்... லண்டனில் 12 வயது சிறுமியிடம் அத்துமீறிய தமிழரின் அருவருக்க வைக்கும் பின்னணி News Lankasri
