மத வழிபாட்டுத் தலத்தில் பாடசாலை மாணவிக்கு நேர்ந்த துயரம்
புத்தளம், ஆனமடுவ பகுதியில் 15 வயது சிறுமியை மத வழிபாட்டுத் தலத்தில் வைத்து பாலியல் ரீதியான தவறான நடத்தைக்கு உட்படுத்தியதாக கூறப்படும் சந்தேக நபரை கைது செய்ய பொலிஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
ஆரம்ப விசாரணைகளில் சிறுமி அதே பாடசாலையை சேர்ந்த ஒரு மாணவரால் பாலியல் ரீதியான தவறான நடத்தைக்கு உட்படுத்தப்பட்டதாகவும், அவர் நவகத்தேகம - அந்தரவேவ பகுதியைச் சேர்ந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஜூன் மாதம் முதல் சிறுமிக்கும் சந்தேக நபருக்கும் காதல் உறவு தொடங்கியுள்ளது. இதனை சாதகமாக பயன்படுத்தி சிறுமியை தவறான நடத்தைக்கு உட்படுத்தியமை தெரிய வந்துள்ளது.
மாணவிக்கு நேர்ந்த துயரம்
பாடசாலை செல்வதாக கூறி, இருவரும் அந்தப் பகுதியிலுள்ள வழிபாட்டுத் தளம் ஒன்றில் தங்கியிருந்துள்ளனர்.

இதன்போது காதலனால் சிறுமி தவாறான நடத்தைக்கு உட்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் சிறுமிக்கும் சந்தேக நபருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தின் பின்னர் சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட சிறுமி தாயிடம் உண்மைகளை தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, தாய் தனது மகளுடன் ஆனமடுவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
சந்தேக நபர் நவகத்தேகம பொலிஸ் பிரிவில் வசிப்பவர் எனவும் அவரைக் கைது செய்து முன்னிலைப்படுத்துமாறு ஆனமடுவ பொலிஸாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக ஆனமடுவ மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
லொறிக்குள் பதுங்கியிருந்த புலம்பெயர் மக்கள்... பிரித்தானிய சாலை ஒன்றில் மடக்கிய பொலிசார் News Lankasri
ஆனந்தியை கொலை செய்ய துளசி செய்த அதிர்ச்சி செயல், தப்பிப்பாரா?... சிங்கப்பெண்ணே சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
அறிவுக்கரசியால் ஜனனியின் தொழிலுக்கு ஏற்பட்ட பெரும் துயரம், எப்படி சமாளிக்க போகிறார்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam