தென்னிலங்கையில் நடந்த கொடூர சம்பவம் - சிறுவனை கொடூரமாக தாக்கிய குடும்பம்
தென்னிலங்கையில் சந்தேக நபரான சிறுவன் மீது குடும்பமாக சேர்ந்து கொடூரமாக தாக்குதல் நடத்தியமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
40 வயதுடைய பெண், அவரது 47 வயதான கணவன், 17 வயதுடைய மகள் மற்றும் 19 வயதுடைய மகன் ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
மனிதாபிமானமற்ற தாக்குதல்
காலி பொலிஸ் பிரிவில் கொள்ளைச் சம்பவமொன்றின் சந்தேகநபராக பெயரிடப்பட்டிருந்த நபரொருவர் மீது மனிதாபிமானமற்ற முறையில் தாக்குதல் நடத்தப்படும் காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் திருட்டுச் சம்பவமொன்றுடன் தொடர்புடையதாக கூறி பெரலபனாதர, தன்தெனியாகந்த பிரதேசத்தைச் சேர்ந்த 16 வயதுடைய சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சிறுவன் நேற்று காலி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
காணொளி காட்சி
குறித்த சந்தேகநபர் மீது, குறித்த திருட்டுச் சம்பவம் தொடர்பில் முறைப்பாடு செய்த தரப்பினரே மனிதாபிமானமற்ற முறையில் தாக்குதல் நடத்தியுள்ளதாக சிறுவனின் தாயாரால் காலி தலைமையக பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் பரவிய காணொளி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு விசாரணை மேற்கொண்ட காலி தலைமையகப் பொலிஸார், இத்தாக்குதலுடன் தொடர்புடைய நான்கு சந்தேகநபர்களை நேற்று கைது செய்துள்ளனர்.
இவ்வாறு தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்கள் காலி, மிலித்துவ பிரதேசத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர்களாகும்.
மகளுக்கு திருமணம்... முதலமைச்சர் விஜயை குடும்பத்துடன் சென்று அழைத்த குஷ்பு - படு வைரலாகும் புகைப்படங்கள் Manithan