அனுரகுமார திஸாநாயக்கவை விவாதத்திற்கு அழைக்கும் சஜித் அணி : செய்திகளின் தொகுப்பு
தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வரும் பட்சத்தில் நிதியமைச்சர்களாக நியமிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படும் சுனில் ஹந்துன்நெத்தி மற்றும் வசந்த சமரசிங்க ஆகியோருடன் பொருளாதாரம் விடயங்கள் தொடர்பாக விவாதம் நடத்த தயாராக இருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தில் நிதியமைச்சர் பதவிகளை வகிப்பார்கள் என கூறப்படும் ஹர்ச டி சில்வா, எரான் விக்ரமரத்ன மற்றும் கபீர் ஹாசிம் ஆகியார் அவர்களுடன் விவாதத்திற்கு வருவார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.
இதன் போது இரண்டு கட்சிகளின் பொருளாதார கொள்கைகள் தொடர்பில் விவாதிக்கலாம். எனினும் தேசிய மக்கள் சக்தியை சேர்ந்த பிரதிநிதிகள் எவரும் இந்த விவாதத்திற்கு வர மாட்டார்கள் என்பதை திடமாக நம்புவதாகவும் நளின் பண்டார குறிப்பிட்டுள்ளார்.
இவை உள்ளிட்ட மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான மதிய நேர செய்திகளின் தொகுப்பு..
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |