ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் வேதன பிரச்சினை! நிதி அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்ட அறிக்கை
இலங்கையில், ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் வேதனத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகளுக்கான தீர்வுகளைப் பரிந்துரைப்பதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை துணைக்குழு, அதன் அறிக்கையை நிதி அமைச்சகத்திடம் ஒப்படைத்துள்ளது.
நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் அமைச்சரவை உபகுழு உறுப்பினர்களுக்கிடையிலான கலந்துரையாடல் நேற்று நடைபெற்றது.
இதன்போதே குறித்த அறிக்கை வெளியிடப்பட்டது.
இந்த அறிக்கையை நிதி அமைச்சக அதிகாரிகள் ஆராய்ந்து அடுத்த வாரம் நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.
இதேவேளை, குறித்த அறிக்கையில், வேதனைப் பிரச்சினையை தீர்க்க பல தீர்வுகளை முன்மொழிந்துள்ளதாக அமைச்சரவை துணைக்குழு உறுப்பினரான, அமைச்சர் மஹிந்த அமரவீர கூறியுள்ளார்.
ஆசிரியர்கள்,அதிபர்கள் அடிப்படை வேதனத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகள் குறித்து ஆராய அமைச்சரவையால் நான்கு பேர் கொண்ட குழு கடந்த வாரம் நியமிக்கப்பட்டது.
இதில் அமைச்சர்கள் விமல் வீரவன்ச, பிரசன்ன ரணதுங்க, மகிந்த அமரவீர மற்றும் டலஸ் அழகப்பெரும ஆகியோர் அடங்கியுள்ளனர்.





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 2 நாட்கள் முன்

குணசேகரன் தலைமையிலேயே பார்கவி-தர்ஷன் திருமணத்தை நடத்தும் ஜனனி... எதிர்நீச்சல் தொடர்கிறது தெறி எபிசோட் புரொமோ Cineulagam

அடம்பிடித்த அன்புக்கரிசி.. தயங்கி நிற்கும் அக்கா பாசம்- பேசாமல் ஒதுங்கிய குணசேகரன் குடும்பம் Manithan
