திருகோணமலையில் வெளிநாட்டவர் மீது தாக்குதல்: ஹோட்டல் சங்கத் தலைவர் கடும் கண்டனம்!
திருகோணமலையில் சுற்றுலாப் பகுதியில் வெளிநாட்டவர் மீது நடந்த தாக்குதலுக்கு கடுமையான கண்டனத்தை திருகோணமலை மாவட்ட ஹோட்டல் சங்கத்தின் தலைவர் குமார் ஜெயகுமரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் கண்டன அறிக்கையை வெளியிட்டு அவர் தெரிவிக்கையில், சமீபத்தில் திருகோணமலை உப்புவெளி அலைஸ் கார்டன் சுற்றுலா பகுதியில் நடந்த தாக்குதலுக்கு கடுமையான கவலை வெளியிடப்படுகிறது.
இதில் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மற்றொரு சந்தேக நபர் தப்பிச் சென்றுள்ளார். இத்தகைய தாக்குதல்கள், திருகோணமலை மாவட்டத்தை பாதுகாப்பான சுற்றுலா இடமாக அறியப்படும் நல்ல பெயரை அழிக்க முயற்சிக்கும் சிலரால் நிகழ்த்தப்படுகின்றன.
சட்ட நடவடிக்கைகள்
இவை எங்கள் மாவட்டத்தின் நம்பிக்கையையும், பாதுகாப்பையும் கேள்விக்குள்ளாக்குகின்றன. வெளிநாட்டு பெண்கள் மற்றும் அவர்களுடன் வரும் ஆண்களை இலக்காகக் கொண்டு தொடர்ச்சியாக தாக்குதல் நடாத்தும் நபர்கள் சமுதாயத்தில் சுதந்திரமாக இருப்பது மிகுந்த அச்சமாகும்.
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை எவரும் தவறாகப் பயன்படுத்த முயற்சித்தால், அதற்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
எமது அமைப்பு பொலிஸாருடன் இணைந்து நடவடிக்கைகளை மேற்கொள்ளும். இவ் விடயம் தொடர்பாக அரச தலையீட்டிற்கு எடுத்துச் சென்று, சுற்றுலாப் பயணிகளுக்கு பாதுகாப்பு, கடுமையான சட்ட நடவடிக்கைகள் மற்றும் நிலையான சரியான தீர்வுகள் உறுதி செய்யப்படும்.
திருகோணமலையின் நற்பெயர், அமைதி மற்றும் சுற்றுலா எதிர்காலத்தை காப்பதற்காக அனைவரும் ஒன்றாக செயல்பட வேண்டுகிறோம் என குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 4 நாட்கள் முன்

தென்னிந்தியாவில் முதன்முறையாக புதிய சாதனை படைத்த விஜய்யின் மதுரை TVK மாநாடு வீடியோ... குஷியில் ரசிகர்கள் Cineulagam
