வரவு செலவு திட்டத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய நடைமுறை
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நேற்றைய தினம் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவு திட்டத்தில் புதிய நடைமுறை ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
வரி இலக்கம் தொடர்பில் இந்த புதிய முறை நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலக்கத்தை உறுதி செய்யும் சான்றிதழ்
நான்கு சந்தர்ப்பங்களில் வரி செலுத்துனர் இலக்கத்தினை உறுதி செய்யும் சான்றிதழ் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பிலான வழிகாட்டல்கள் தேசிய வருமான வரி ஆணையாளர் நாயகத்தினால் எதிர்வரும் நாட்களில் வெளியிடப்பட உள்ளது.
வங்கி கணக்கு ஒன்றில் நடைமுறை கணக்கு திறக்கும் போது வீடு அல்லது கட்டிடம் ஒன்றை நிர்மாணிப்பதற்கான அனுமதி பெற்றுக் கொள்ளும் போது மோட்டார் வாகனம் ஒன்றை பதிவு செய்யும் போது அல்லது அனுமதி பத்திரம் பெற்றுக் கொள்ளும் போது அல்லது காணி உரிமை பதிவின்போது வரி செலுத்துனரின் இலக்கத்தை உறுதி செய்யும் சான்றிதழ் சமர்ப்பித்தல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |