வரி அதிகரிப்பு உற்பத்தியாளர்களையும் நுகர்வோரையும் பாதிக்கும்: ஹர்ஷ டி சில்வா சுட்டிக்காட்டு
வரவு செலவுத் திட்டத்தின் மூலம் வரி அதிகரிப்பினால் உற்பத்தியாளர்கள் மற்றும் நுகர்வோர் ஆகிய இருபாலரும் பாதிக்கப்படவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
வரவு செலவுத் திட்டம்
நாடாளுமன்றத்தில் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டதன் அடிப்படையில் தாங்கள் வெற்றி பெற்றோம் என்ற எண்ணத்தில் அரசாங்கம் இருந்தால் அது தவறு என அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், முன்னைய தலைவர்கள் வரிகளை குறைப்பதற்கு மோசமான தீர்மானத்தை எடுத்ததன் காரணமாகவே இன்று இலங்கை இவ்வாறானதொரு நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது எனவும் அன்று மேற்கொண்ட தீர்மானம் நடைமுறைக்கு சாத்தியமற்றது எனவும் ஹர்ச டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |