வரி ஏய்ப்புக்கு துணைபுரியும் அதிகாரிகள் மீது விசாரணைகள் ஆரம்பம்
செல்வந்த வர்த்தகர்களுக்காக சுங்கம் மற்றும் வருமான வரிகளில் ஏய்ப்புச் செய்ய துணைபுரியும் அதிகாரிகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
ஒருசில அதிகாரிகளின் தனிப்பட்ட நட்பைப் பயன்படுத்தி செல்வந்த வர்த்தகர்கள் சுங்கம் மற்றும் வருமான வரிகளை ஏய்ப்புச் செய்து வருவதாக நிதிமோசடி புலனாய்வுப் பிரிவினர் அரசாங்கத்துக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.
இதனையடுத்து குறித்த அதிகாரிகள் தொடர்பில் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு அரசாங்கத்தினால் புலனாய்வு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வரி மோசடி
இவ்வாறான மோசடிகள் காரணமாக அரசாங்கத்துக்கு வருடாந்தம் ஆயிரம் கோடி ரூபா அளவிலான வரி மோசடி செய்யப்படுவதாக புலனாய்வுப் பிரிவின் அறிக்கை மூலம் தெரிய வந்துள்ளது.
சுங்கத்திணைக்களம் மற்றும் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் பணியாற்றும் சுமார் அறுநூறு அதிகாரிகள் இவ்வாறான மோசடிகளுக்கு துணைபுரிவதாக கண்டறியப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அரசாங்கத்தின் வருமானம் மற்றும் நிதிகளை ஒழுங்கானமுறையில் நிர்வகிப்பதற்கான புதிய அதிகார சபையொன்றை உருவாக்குவது தொடர்பிலும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கவனம் செலுத்தி வருவதாக அறியக் கிடைத்துள்ளது

கடலுக்கு அடியில் மிகப்பெரிய ஜாக்பாட்டை கண்டுபிடித்த இந்தியாவின் நட்பு நாடு.., ஆனால் ஒரு சிக்கல் News Lankasri
