இலங்கையில் வரி ஏய்ப்பில் ஈடுபடுவோருக்கு எதிராக நடவடிக்கை! அரசாங்கம்
வரி ஏய்ப்பில் ஈடுபடுவோரை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்க உள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
தங்களது வருமானத்தை மறைத்து வரி ஏய்ப்பில் ஈடுபடும் நபர்களை அடையாளம் காண நடவடிக்கை எடுக்குமாறு உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகத்திற்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
சில தொழில்துறைகளில் ஈடுபட்டு வருபவர்கள் தங்களது வருமானத்தை மறைத்து தொடர்ச்சியாக வரி செலுத்துவதிலிருந்து தப்பித்து வருவதாக நிதி ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
அதிகாரிகளுடன் சந்திப்பு
உள்நாட்டு இறைவரித் திணைக்கள அதிகாரிகளுடன் நடைபெற்ற சந்திப்பின் போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
வரி ஏய்ப்பாளர்களை அடையாளம் காண்பது முக்கியமானது எனவும், இதன் மூலம் அரச வருமானத்தை அதிகரித்துக் கொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வீட்டைவிட்டு வெளியே போன மீனா, விஜயாவிற்கு ஷாக் கொடுத்த முத்து.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam

ரஷ்யா, சீனாவுடன் ஆயுதப்போட்டி ஏற்படும் அச்சம்: அதிர்ச்சியூட்டும் உத்தரவை பிறப்பித்த செயலாளர் News Lankasri
