சகோதரி அம்பிகையின் அறப்போராட்டம் வெல்ல தமிழர்கள் தோள் கொடுக்கவேண்டும் - கமல்ஹாசன்
லண்டனில் நீதிக்காகப் போராடும் அம்பிகை செல்வகுமார் என்ற பெண்ணின் குரலுக்கு பிரிட்டன் செவிமடுக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
சர்வதேச நீதியை வலியுறுத்தி முன்னெடுக்கப்பட்டு வரும் அம்பிகையின் போராட்டம் தொடர்பில் கமல்ஹாசன் தனது டுவிட்டர் தளத்திலே இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
‘இன அழிப்புக்கு நீதி கிடைக்கக் கோரி லண்டனில் ஈழத்துச் சகோதரி அம்பிகை செல்வகுமார் பெப்ரவரி 27 ஆம் திகதி முதல் உண்ணாநிலைப் போராட்டம் நிகழ்த்திக்கொண்டிருக்கிறார். நீதிக்காகப் போராடும் பெண்மணியின் குரலுக்கு பிரிட்டன் செவிமடுக்க வேண்டும்.
சகோதரியின் போராட்டம் வெல்ல தமிழர்கள் தோள் கொடுக்க வேண்டும்’ எனவும் கமல்ஹாசன் டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இன அழிப்புக்கு நீதி கிடைக்கக் கோரி லண்டனில் ஈழத்துச் சகோதரி அம்பிகை செல்வகுமார் பிப்ரவரி 27 முதல் உண்ணாநிலைப் போராட்டம் நிகழ்த்திக்கொண்டிருக்கிறார்.நீதிக்காகப் போராடும் பெண்மணியின் குரலுக்கு பிரிட்டன் செவிமடுக்க வேண்டும்.சகோதரியின் போராட்டம் வெல்ல தமிழர்கள் தோள் கொடுக்க வேண்டும்.
— Kamal Haasan (@ikamalhaasan) March 14, 2021
ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்காவிட்டால்.,ஈரானுக்கு 48 மணி நேரம் கெடு விதித்த டிரம்ப் News Lankasri
குடும்பத்திற்கு எதிராக மீனா செய்த காரியம், கோபத்தில் கடுமையாக திட்டிய ராஜி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam