தமிழக முதலமைச்சராக விஜய்க்கு கமல்ஹாசன் வாழ்த்து
சற்றுமுன்னர் தமிழக முதலமைச்சராக விஜய் பதவியேற்றுள்ள நிலையில் விஜய்க்கு மநீம தலைவர் கமல்ஹாசன் வாழத்து தெரிவித்துள்ளார்.
தனது எக்ஸ் தளத்தில் பதிவொன்றினையிட்டு அவர் வாழத்து தெரிவித்துள்ளார்.
‘தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர், தம்பி விஜய் அவர்களின் தலைமைத்துவத்தில் தமிழ்நாடு சிறக்கட்டும். புதிய உயரங்களை அடையட்டும். என் இதயப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.” இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.
நேரு உள் விளையாட்டு அரங்கில் முதலமைச்சராக விஜய் இன்று பதவியேற்றுக்கொண்ட நிலையில், பதவியேற்பு விழாவில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
முதல மைச்சராக பதவியேற்றுள்ள விஜய்க்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், மற்றும் மக்கள் மத்தியில் இருந்து வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.