வவுனியாவில் நடைபெற்ற தமிழ்மாருதம் விழா
வவுனியா (Vavuniya) தமிழ் மாமன்றத்தின் தமிழ் மாருதம் விழாவானது பண்பாட்டு ஊர்வலத்துடன் இடம்பெற்றுள்ளது.
இருநாள் நிகழ்வுகளாக ஆரம்பமான குறித்த விழாவானது நேற்று (06.04.2024) மாலை 03.00 மணிக்கு வவுனியா விபுலானந்தர் சிலை முன்பிருந்து ஆரம்பமாகி வவுனியா மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தை வந்தடைந்துள்ளது,
புத்தகக் கண்காட்சி
இந்நிலையில், முதல் நாள் நிகழ்வுகள் நடைபெற்று இன்று (07) இரண்டாம் நாள் நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன.
குறித்த நிகழ்வில் தமிழ் மக்களின் வாழ்வியலுடன் இணைந்த கலை நிகழ்வுகள், நடனம், நாட்டியம், இசை, நாடகம், விவாதம், சுழலும் சொற்போர், கவியரங்கு, வரலாற்று நாடகம் என பல்துறை சார்ந்த விடயங்களை உள்ளடக்கி நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் புத்தக கண்காட்சியும் இடம்பெற்றுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |