மட்டக்களப்பில் மூன்று இளைஞர்களுக்கு குற்றப்புலனாய்வு விசாரணை
மட்டக்களப்பு (Batticaloa) மாவட்டத்தின் தமிழரசுக்கட்சி வாலிபர் அணி முன்னாள் தலைவர் மற்றும் தமிழ் இளையோர் மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஆகிய இருவருக்கும் குற்றப்புலனாய்வு தடுப்பு பிரிவினரால் (CID) விசாரணைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த இருவருக்கும் எதிர்வரும் 11 மற்றும் 12ஆம் திகதிகளில் மட்டக்களப்பிலுள்ள அலுவலகத்திற்கு விசாரணைக்கு வருமாறு கூறி குற்றப்புலனாய்வு தடுப்பு பிரிவினரால் கடிதம் ஒன்று வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
விசாரணைக்கு அழைப்பு
அதேவேளை, தமிழ் இளையோர் மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளரும் மனிதவுரிமை செயற்பாட்டாளருமான கொக்கட்டிச்சோலையைச் சேர்ந்த ஜீவரெத்தினம் தவேஸ்வரனையும் எதிர்வரும் 11, 12ஆம் திகதிகளில் விசாரணைக்காக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, ஒரே நாளில் 11 மணித்தியாலம் 45 நிமிடங்கள் தடுத்து வைக்கப்பட்டு மட்டக்களப்பில் உள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவின் அலுவலகத்தில் வாக்கு மூலம் பெறப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |