இறைபதமடைந்தார் தமிழ் வித்துவான் வாகரைவாணன்
1941 டிசம்பர்22 ல் மட்டகளப்பு வாகரை மண்ணில் சந்தியாப்பிள்ளை தம்பதிகளுக்கு உதித்த அரியரெத்தினம் எனும் இயற்பெயரைக்கொண்ட வாகரை வாணன் நேற்று(10.08.2026) இறைவடி சேர்ந்துள்ளார்.
இவர் தோற்றத்தில் எளிமையும், அறிவில் ஆழமும் செயற்பாட்டில் இடையறா உக்கிரமும் தளராத நெஞ்சமும் கொண்ட அறிவாளன் ஆவார்.
தமிழ் வித்துவான் வாகரைவாணன்
இலங்கை தமிழரசுக் கட்சி உத்தியோக பூர்வ பத்திரிகையான “சுதந்திரன்”பத்திரிகையில் பணியாற்றிய இவர் மட்டக்களப்பில் தமிழரசுக்கட்சியால் 1960, காலப்பகுதியில் இடம்பெற்ற அறவழிப்போராட்டங்களிலும் பங்குபற்றியுள்ளார்.
தமிழ் வித்துவான் வாகரைவாணன் ஆங்கிலம் மற்றும் இலத்தின் மொழிகளில் புலமை மிக்கவராக காணப்படுவதுடன் தழிழிலும் ஆங்கிலத்திலும் பல நூல்களை ஆக்கியுள்ளார்.

மேலும் கவிதைகள், நாடகங்கள், சிறுகதைகள் மற்றும் ஆய்வுக்கட்டுரைகள் பலவற்றையும் இவர் எழுதியுள்ளார். அத்துடன் தமிழர் தேசியச் சிந்தனை மற்றும் தமிழ் உணர்வு கொண்ட ஒரு ஆளுமையாக இவர் அறியப்படுகிறார்.
அன்னாரில் பூதவுடல் இறுதி அஞ்சலிக்காக மட்டக்களப்பு நாவற்குடா புனித சின்னலூர்து அன்னை திருத்தலத்தில் வைக்கப்பட்டுள்ளதுடன் இன்று(11) பி.ப.3.30 மணிக்கு நாவற்குடா கத்தோலிக்க சேமக்கவாலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவர் சுட்ட பொன் (கவிதைகள்) 1970, எண்ணத்தில் நீந்துகிறேன் (கவிதைகள்) 1971, பயணம் (கவிதைகள்) 1972 ,துரோணர் சபதம் (நாடகம்) 1972தமிழ்ப்பாவை 1980, கடற்கரைப் பூக்கள் (கவிதைத் தொகுப்பு) 1983, இனிக்கும் தமிழ் (கட்டுரை) 1989, கிறிஸ்து தத்துவம் 1991, சின்னச் சின்னக் கதைகள்1991, ஆசிரியன் ஓர் அட்சயப்பாத்திரம் (புதுக்கவிதைகள்) 1992, அருளாளர் அந்தோனியார் (யாழ் இலக்கியப் பேரவையின் பரிசு பெற்றது) 1993, ஒரு பூ மலர்கிறது (நாடகம்) 1993, பாலர் தமிழ்ப்பாட்டு (சிறுவர் இலக்கியம்) (யாழ் இலக்கியப் பேரவையின் பரிசு பெற்றது) 1993, கிறிஸ்து காவியம் 1995, சின்னச் சின்னப் பூக்கள் (சிறுவர் இலக்கியம் – இலங்கை அரசின் இலக்கியப்பரிசு பெற்றது.) 1997, சமயம் – சில சிந்தனைகள் (கட்டுரைகள்) 1997 சிறு கதை விமர்சனம் 1997, அரசி உலக நாச்சியார் (சிறுகதைத் தொகுப்பு) 1998, புதுக்கவிதைப் புத்தகம் (புதுக்கவிதைகள்) 1998, விசுவாசத்தின் புதிய விடியல் (தமிழ் மொழி பெயர்ப்பு) 1998, தமிழர் வரலாற்றில் சில பக்கங்கள் 1999, இன்ரநெற் தமிழ் (கட்டுரைத் தொகுப்பு) 1999, ஆல ஊழரவெசல (ஆங்கிலக் கவிதை) 2000, நீ வா நிலாவே (சிறுவர் இலக்கியம்) 2000, சின்னஞ் சிறு கிளியே (சிறுவர் இலக்கியம்) 2000, ஆய் தமிழ் (ஆய்வுக்கட்டுரைகள்) 2001, வாகரை ஒரு வரலாற்றுப்பார்வை (வரலாறு) 2003 நந்திக்கொடி (வரலாற்றுக் குறு நாவல்) 2004, பழந்தமிழ் இலக்கியத்தில் மட்டக்களப்புத் தமிழ் 2005, இன்னாசியார் காவியம் 2005, பனிச்சங்கேணி அரசி (வரலாற்றுச், சிறுகதைகள்) 2007, கிழக்கிலங்கைத் தமிழகம் (வரலாறு) 2011, மட்டக்களப்புக் காவியம் 2016, வாகரை வாணனின் ஆய்வுக் கட்டுரைகள் 2017, உரைநடை மற்றும் கவிதை 2017, தமிழ்ப் பாவை தைப்பாவை 2017, தமிழ் மண் மட்டக்களப்பு. 2019, தலைநிமிர்ந்து நிற்கும் தமிழ் 2021, சோளன்சேனையும் சேலைக்கிளிகளும் 2023, எண்ணங்கள் ஆயிரம் (கட்டுரை) 2024, ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகள் உரிமைப் பிரகடனம்(மொழிபெயர்ப்பு) ஆகிய 42 கட்டுரைகளை எழுதியுள்ளார்.