முள்ளிவாக்காலில் தமிழ் மக்களுக்கு எதிராக நடந்த அநீதிக்கு நீதி வேண்டும்: சிறீன் சரூர்
இலங்கையின் முள்ளிவாக்காலில் தமிழ் மக்களுக்கு எதிராக நடந்த அநீதிக்கு நீதி வேண்டும் என மனித உரிமை செயற்பாட்டளர் சிறீன் சரூர் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் (Batticaloa) நேற்றைய தினம் (11.05.2024) இடம்பெற்ற நீதிக்கான நடை பயணத்தை தொடர்ந்து ஊகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதெ அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
முள்ளிவாய்காலில் இடம்பெற்ற அநீதி
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இன்று காசாவில் என்ன நடக்கின்றதோ அவ்வாறே 2009 ஆம் ஆண்டு இலங்கையின் முள்ளிவாய்க்காலில் நடைபெற்றது.
அப்போது பாரியளவில் மக்கள் அழிந்தபோதும் யுத்த குற்றங்கள் இடம்பெற்ற போதும் ஒரு போதும் மக்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை. காசாவிலும் இது தான் நடக்கின்றது.
எனவே சர்வதேசத்தில் இலங்கையில் தமிழ் மக்களுக்கு குறிப்பாக முள்ளிவாய்காலில் இடம்பெற்ற அநீதிக்கு நீதி வேண்டும்.
இதேவேளை உலக நாடுகளிலும் காசா மற்றும் உக்கிரேனில் பாரியளிவில் பெண்களையும் சிறுவர்களையும் அழித்தொழிப்பதை பெண்காகிய எங்களால் பார்த்துக் கொண்டிருக்க முடியாதமையினால் இந்த போராட்டத்தில் ஈடுபடுகின்றோம்” என தெரிவித்துள்ளார்.
அத்துடன் இந்த நடைபயணத்தில் உணவு விலையை குறை, கடலை நோக்கி நகராத நதி எதற்கு? பலஸ்தீனம் இல்லாத உலகம் எதற்கு, பலஸ்தீன மக்களுக்கு எதிரான இனப் படுகொலையை நிறுத்து போன்ற சுலோகங்கள் ஏந்தியவாறு மௌனமாக இந்த நடை பயணம் காந்தி பூங்காவை சென்றடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |