சித்தங்கேணி இளைஞன் விவகாரம்! கண்டன போராட்டத்திற்கு அழைப்பு
வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு உயிரிழந்த சித்தங்கேணி பகுதியை சேர்ந்த இளைஞசனிற்கு நீதி வேண்டி கண்டன போராட்டத்தை முன்னெடுப்பதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடக பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ் இந்த அழைப்பை விடுத்துள்ளார்.
கண்டன போராட்டம்
அவர் வெளியிட்ட அறிக்கையில், வட்டுக்கோட்டை பொலிஸாரின் காட்டுமிராண்டித்தனமான சித்திரவதைகளால் படுகொலை செய்யப்பட்ட நாகராசா அலெக்ஸனின் மரணத்திற்கு நீதி கோரியும் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் தொடர்ச்சியாக அரங்கேற்றப்பட்டு வரும் சட்டவிரோத சித்திரவதைகளை நிறுத்த கோரியும் கண்டன போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்த கண்டன போராட்டம் எதிர்வரும் 03.12.2023 ஞாயிற்றுகிழமை பி.ப 3.00 மணிக்கு வட்டுக்கோட்டைச் சந்தியில் நடைபெறவுள்ளது.
இந்த போராட்டத்தில் அனைவரும் திரண்டு எமது எதிர்ப்பை பதிவு செய்வோம், நீதிக்கான குரலை ஓங்கி ஒலிப்போம். அல்லது இன்று அலெக்ஸ், நாளை? என குறிப்பிடப்பட்டுள்ளது.
நெளுக்குளம் - செட்டிகுளம் வீதியை பயன்படுத்துவோருக்கு அனர்த்த முகாமைத்துவ நிலையம் விடுத்துள்ள அறிவிப்பு
ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான பாதையை யார் வழிநடத்துவது.. 21 நிமிடங்கள் முன்
முதல்முறையாக அதிநவீன F-22 ராப்டர் ஸ்டெல்த் போர் விமானங்களை இஸ்ரேலில் நிலைநிறுத்தும் அமெரிக்கா News Lankasri
ரோஹினியால் பாத்ரூமில் மறைந்து கதறும் மனோஜ், விஜயாவிற்கு ஷாக் கொடுத்த மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
புதிய நிகழ்ச்சியை தொடங்கியுள்ள விஜய் டிவி... முதலில் கலந்துகொள்ளும் பிரபலங்கள் யார் பாருங்க Cineulagam