சீமான் வீட்டில் கடும் குழப்பம்:பொலிஸாரை நோக்கி துப்பாக்கியை ஏந்திய காவலாளி
நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் (Seeman) வீட்டில் பொலிஸார் ஒட்டிய அழைப்பாணை கிழிக்கப்பட்டதில் காவலாளிக்கும் பொலிஸாருக்குமிடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில், பொலிஸாரை நோக்கி துப்பாக்கியை ஏந்திய காவலாளி கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், அழைப்பாணை ஒட்டி சில நிமிடங்களில் சீமான் வீட்டில் இருந்து வந்த நபரொருவர் அதனைக் கிழித்துள்ளார்.
நடிகர் ஒருவர் அளித்த முறைப்பாட்டின் பேரில் விசாரணைக்கு சீமான் முன்னிலையாகாததால் பொலிஸாரால் இந்த அழைப்பாணை ஒட்டப்பட்டுள்ளது.
தீவிர விசாரணை
இந்தநிலையில், நாளை (28) காலை 11 மணிக்கு வலசரவாக்கம் பொலிஸ் நிலையத்தில் விசாரணைக்கு முன்னிலையாகுமாறு பொலிஸார் அந்த அழைப்பாணையில் குறிப்பிட்டிருந்தனர்.
தற்போது, விசாரணைக்கு ஒத்துழைக்காவிட்டால் சீமானை கைது செய்ய நேரிடும் எனவும் பொலிஸார் ஒட்டிய அழைப்பாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தநிலையில், குறித்த அழைப்பணையை கிழித்த சீமானின் காவலாளிக்கும் பொலிஸாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது.
இந்த விவகாரம் குறித்து சீமானின் மனைவி பொலிஸாரிடம் மன்னிப்புக் கோரியுள்ளார்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |