தேர்தலை இலக்கு வைத்து வாக்குகளை வேட்டையாடும் அண்ணாமலை: முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு (video)
வடக்கு கடற்றொழிலாளர்கள் அத்துமீறிய இந்தியா ரோலர் படகுகளினால் தமது வாழ்வாதாரங்களை இழந்து வரும் நிலையில் தேர்தல் அரசியலுக்காக பாஜக தமிழ்நாட்டு தலைவர் அண்ணாமலை தமிழக கடற்றொழிலாளர்களை உசுப்பேத்தக் கூடாது என யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சமாசம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இன்று (04.08.2023) யாழ்ப்பாணத்தில் உள்ள ஏழு மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சமாசக் கட்டடத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
கடற்றொழிலாளிகளின் வாக்குகளை வேட்டையாடும் முயற்சி
அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,
எதிர்வரும் வருடம் இந்தியாவில் தேர்தல் இடம்பெற வாய்ப்புகள் உள்ள நிலையில் தேர்தலை இலக்காக வைத்து தமிழக கடற்றொழிலாளிகளின் வாக்குகளை வேட்டையாடுவதற்கு அண்ணாமலை செயற்பட்டு வருகிறார்.
அதன் ஒரு அம்சமாக தமிழ் நாட்டில் இடம்பெற்ற பாதயாத்திரை நிகழ்வில் கச்சதீவை இந்தியா கடற்றொழிலாளர்களுக்கு மீட்டு தருவதற்கு பிரதமர் மோடியிடம் பேசுவதாக தெரிவித்துள்ளார்.
அண்ணாமலை யாழ்ப்பாணம் வந்தபோது வடக்கு மக்கள் தொப்புள் கொடி உறவு அவர்களுக்கு பாதிக்காத வகையில் இந்திய கடற்றொழிலாளர்களை கடற்றொழிலில் ஈடுபடுவது தொடர்பில் தாம் பேசுவதாக தெரிவித்துச் சென்றிருந்தார்.
கச்சதீவை மீட்கும் முயற்சியின் நோக்கம்
ஆனால் தேர்தலை இலக்காக வைத்து தமிழக கடற்றொழிலாளிகளின் வாக்குகளை பெறுவதற்காக கச்சதீவை மீட்டு தரப் போகிறேன் என கூறுகிறார்.
அண்ணாமலையிடம் நாம் ஒன்றைக் கேட்க விரும்புகிறோம். இந்தியா ஆத்துமீறிய ரோலர் படகுகளினால் எமது மக்கள் தொடர்ந்தும் பல்வேறு துன்பங்களை அனுபவித்து வரும் நிலையில் வாழ்வா சாவா என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இவற்றையெல்லாம் அறிந்தும் இவ்வாறு கருத்து தெரிவித்தமையை நாம் கண்டிக்கிறோம். மேலும் இந்தியா ரோலர் படகுகளின் ஆதிக்கம் மீண்டும் ஆரம்பித்துள்ள நிலையில் கடற்றொழிலாள் அமைச்சர் என்ன செய்கிறார் என்பது தொடர்பில் எமக்குக் கேள்விகள் எழுகின்றது.
கடற்றொழிலாளர்களை பாதுகாப்பதற்கான அமைச்சை பெற்றுள்ள கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடற்றொழிலாளர்களின் நிலையை கருத்தில் கொண்டு முடிவுகளை எடுக்க வேண்டும்.
ஆகவே இந்திய அத்துமீறிய ரோலர் படகுகளை தடை செய்வதற்கு யாழ் இந்தியத் துணைத் தூதரகமும் அமைச்சரும் ஜனாதிபதியும் விரைவான நடவடிக்கையினை எடுக்க வேண்டும் என அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
கறித்த ஊடக சந்திப்பில் வழி வடக்கு கடற்தொழிலாளர் கூட்டுறவு சமாசத்தின் தலைவர் பாக்கியநாதன் மேகன் மற்றும் வேலை தென்மேற்கு சமாசத்தின் தலைவர் அந்தோணிப் பிள்ளை மரியதாஸ் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
உங்களது நாளைய ராசிப்பலனை இன்றே தெரிந்து கொள்ள எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW |