மனநலம் பாதிக்கப்பட்ட இந்திய கடற்றொழிலாளரை விடுவிக்குமாறு குடும்பத்தினர் கோரிக்கை
இலங்கை கடற்பரப்பில் எல்லை தாண்டி கடற்றொழிலில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட இந்திய மீனவரை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்யக்கோரி கடற்றொழிலாளரின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நேற்றையதினம்(05.01.2026) இவ்வாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு - இராமேஸ்வரம் பகுதியில் இருந்து, கடற்றொழிலுக்கு சென்றவர்கள் கடந்த 30ஆம் திகதி இலங்கை கடற்பரப்பில் எல்லை தாண்டி கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றத்திற்காக நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடற்றொழிலாளர் விடுவிப்பு கோரிக்கை
கைது செய்யப்பட்ட பிரபு(49), நாகராஜ்(47), ரூபன்(45) ஆகிய மூன்று கடற்றொழிலாளர்களையும் இலங்கை கடற்படையினர் யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் முற்படுத்திய நிலையில், அவர்களை எதிர்வரும் 13ஆம் திகதி வரை யாழ்ப்பாணம் சிறையில் தடுத்து வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கைதான பிரபு, மனநலம் பாதிக்கப்பட்டு கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்தும் சிகிக்சை பெற்று வருவதாகவும், நாளாந்தம் தூக்க மருந்து எடுத்துக் கொள்பவர் என்றும், இவருக்கு கடந்த 3ஆம் திகதி மதுரையில் உளவியல் சிகிச்சை பெற இருந்த நிலையில் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் என அவரின் மனைவி தெரிவித்துள்ளார்.
அத்துடன், தற்போது கடற்றொழிலாளர் பிரபு தூக்க மாத்திரை எடுத்துக் கொள்ளாமல், உடைகளை மாற்றாமல் உணவு உண்ணாமல், மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருப்பதாக உடன் இருக்கும் கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளார்கள் என அவருடைய குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதனால் அவரை விரைவில் விடுவிக்க வேண்டும் எனவும், ஏனெனில் அவருடைய உடல்நலம் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டிருப்பதாகவும், அவரை உயிருடன் தங்களிடம் ஒப்படைக்குமாறும் உறவினர்கள் மேலும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தள்ளிப்போன ஜனநாயகன்.. 'இது அதிகார துஷ்பிரயோகம்': விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்த பிரபலங்கள் Cineulagam