தமிழ் கோல்ஃபர்ஸ் வலையமைப்பு கனடாவில் உதயம்
தமிழ் கோல்ஃபர்ஸ் வலையமைப்பு (Tamil Golfers Network) கனடாவில் உதயமாகவுள்ளது.
கனடா மற்றும் உலகளாவிய ரீதியிலுள்ள தமிழ் சமூகத்திற்குள் கோல்ஃப் விளையாட்டின் மீதான ஆர்வத்தை தூண்டும் விதமாக இந்த வலையமைப்பு 07/27/2022 அன்று ஆரம்பிக்கப்படவுள்ளது.
தமிழ் கோல்ஃப் நெட்வொர்க் (TGN) உலகத் தமிழர்களின் சமூக மயமாக்கல் மற்றும் வலையமைப்புக்கான வாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒன்டாரியோவில் உள்ள உக்ஸ்பிரிட்ஜில் (Uxbridge) ஸ்டோஃப்வில்லுக்கு (near Stouffville) அருகில் அமைந்துள்ள விண்டான்ஸ் (Wyndance) கோல்ஃப் மைதானத்தில் இதன் தொடக்க நிகழ்வு ஜூலை 27 அன்று நடைபெறவுள்ளது.
வரவிருக்கும் கோல்ஃப் விளையாட்டு போட்டிகள் மற்றும் நட்புரீதியான போட்டிகள் மூலம் அனைத்து விளையாட்டுப் பின்னணிகள் மற்றும் அனைத்து விளையாட்டுத் திறன்களிலிருந்தும் தமிழ் கோல்ப் வீரர்களின் சமூகத்தை வளர்த்து ஒன்றிணைப்பதே TGN நோக்கமாகக் கொண்டுள்ளது.
கோல்ஃப் விளையாட்டு சுவாரஸ்யமாக இருந்தாலும் அதில் தேர்ச்சி பெறுவது மிகவும் சவாலானதாகும். 25 ஆண்டுகளுக்கு முன்பு உலகின் தலைசிறந்த கறுப்பினத்தை இனத்தைச் சேர்ந்த கோல்ப் வீரராக டைகர் உட்ஸ் (Tiger Woods) தோன்றிய பிறகு, சிறுபான்மையினரிடையே கோல்ஃப் ஒரு விளையாட்டாக ஒரு பெரிய மறுமலர்ச்சியைக் கண்டது.
தமிழ் கோல்ஃப் நெட்வொர்க் முயற்சி மூலம் வீரர்கள் விளையாட்டு மற்றும் கோல்ஃப் வலையமைப்புக்கான வாய்ப்புகள் இரண்டையும் அனுபவிப்பார்கள். பல வெற்றிகரமான இன கோல்ஃபிங் சங்கங்கள் உள்ளன.
அவை செழித்து வளர்ந்து வருகின்றன. அதற்கு அவர்களின் சமூகங்களுக்கு மிகப்பெரிய ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்குகின்றன.
தமிழ் கோல்ஃப் நெட்வொர்க் (TGN) க்கான முக்கிய இலக்குகள்
1.கோல்ஃப் விளையாட்டை தமிழ் சமூகத்திற்கு ஊக்குவித்து, புதிய ஆர்வலர்களுக்கு அதை திறந்த களமாக்குதல்.
2.கோல்ஃப் விளையாட்டை பன்முகப்படுத்தி, ஆண்கள் மற்றும் பெண்களுக்கு அணுகக்கூடியதாக ஆக்குதல்.
3. இளம் வீரர்கள் தங்கள் திறமைகளை வெளிக்கொண்டுவருவதற்கு ஒரு களமாக பயன்படுத்துதல்.
4. வணிக மற்றும் வாய்ப்புகளை TGN மூலம் உருவாக்குதல்.
5. குடும்பங்கள் மற்றும் சமூகங்கங்களுக்கிடையே கோல்ஃப் விளையாட்டு வாய்ப்புகளை ஊக்கப்படுத்துதல்.
ஜூலை 27ஆம் திகதி நடைபெறவுள்ள தமிழ் கோல்ஃப் நெட்வொர்க் (TGN) இன் ஆரம்ப சாம்பியன்ஷிப் போட்டிக்கு எமது தமிழ் சமூகத்துக்கிடையே பெரும் எதிர்பார்ப்புள்ளது.
TGN இன் ஜூலை 27ஆம் திகதி தொடக்க அறிவிப்புக்குப் பிறகு ஒரு மாதத்திற்குள் அதிகபட்சமாக 72 கோல்ஃப் பங்கேற்பாளர்கள் தங்களை TGN உடன் பதிவு செய்துள்ளனர்.
இது மிகவும் வரவேற்கப்படவேண்டிய விடயம். சாம்பியன்ஷிப் போட்டியைத் தொடர்ந்து 140 விருந்தினர்களுக்கு இரவு விருந்து உபசாரம் இடம்பெறவுள்ளது. தமிழ் கோல்ஃப் நெட்வொர்க் (TGN) தனது தொடக்க நிகழ்விற்கு வணிக சமூகத்தின் அனுசரனை ஆதரவைப் பெறுவதில் வெற்றியும் பெற்றுள்ளது.
தமிழர்களுக்குச் சொந்தமான வணிக நிறுவனங்கள் அனுசரனை பல தமிழர்களுக்குச் சொந்தமான வணிக நிறுவனங்கள் மற்றும் வியாபார நிறுவனங்களின் அனுசரனைகளைப் பெற்றிருக்கின்றது.
EnMobi, Cableshoppe, Affinity Mortgages, IBC போன்ற பல தமிழர்களுக்குச் சொந்தமான வணிக நிறுவனங்கள் மற்றும் TD வங்கி மற்றும் CI நிதிகள் போன்ற முக்கிய நிறுவனங்களும் தங்கள் அனுசரனைகளை வாரி வழங்கியுள்ளனர்.
யோகநாதன் ரதீசன் தலைமையில் குளோபல் தலைவராகவும், ஸ்டான் முத்துலிங்கம் கனடாவுக்கான தலைவராகவும் 7 குழு உறுப்பினர்களைக் கொண்ட வலுவான குழுவை தமிழ் கோல்ஃப் நெட்வொர்க் (TGN) கொண்டுள்ளது.
TGN சாம்பியன்ஷிப் போட்டிகளை எதிர்காலத்தில் விரிவுபடுத்தி, அதிக எண்ணிக்கையிலான வீரர்களை உள்வாங்கி கோல்ஃப் விளையாடி மகிழக்கூடிய வருடாந்திர நிகழ்வாக மாற்றுவதற்கு எண்ணியுள்ளது.
தமிழ் கோல்ஃப் நெட்வொர்க் (TGN) ஆனது ஆண்டு முழுவதும் அனைத்து திறன்களைக் கொண்ட கோல்ப் வீரர்களுக்கும் கூடுதல் போட்டி நிகழ்வுகளை ஏற்பாடு செய்ய திட்டமிட்டுள்ளது.
TGN பற்றிய கூடுதல் தகவலுக்கு, www.tamilgolfersnetwork.com எனும் இணையத்தை பார்வையிடவும்.