கடற்றொழிலாளர்களை படுகொலை தொடர்பில் பங்குதந்தை ஆவேசம்!
சுண்டிக்குளம் பூனை தொடுவாய்யில் அப்பாவி கடற்றொழிலாளர்கள் என்று தெரிந்தும் அவர்களை இலங்கை கடற்படை திட்டமிட்டு படுகொலை செய்தது அரசின் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையின் ஒரு அங்கம் என கட்டைக்காடு பங்குத்தந்தை வசந்தன் குற்றம் சுமத்தியுள்ளார்.
32 ஆவது நினைவேந்தல் நிகழ்வு நேற்று(18.02.2026) புதன்கிழமை கடடைக்காடு சென் மெரிஸ் விளையாட்டு கழக மைதானத்தில் இடம்பெற்றது.
இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இனப்படுகொலை
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
வரலாற்று நினைவுகள் 1994 முதல் 2009 வரை இலங்கையில் தமிழர்களின் மீது நடந்த இனப்படுகொலை, இன்று தமிழர் தாயக பிரதேசங்களில் கட்டமைக்கப்பட்ட புதிய வடிவத்தில் தொடர்கிறது.
அப்பாவி கடற்றொழிலாளர்கள் மற்றும் சாதாரண மக்கள் கடற்படையினால் தாக்கப்பட்டனர் அவர்கள் கையாலேயே தங்கள் குடும்பங்களை நடத்த முயன்ற போது இந்த தாக்குதல் நடந்தது.
வரலாற்றை மறக்கக் கூடாது இளைஞர்கள் இனப்படுகொலை நிகழ்வுகளை அறிய வேண்டும் மற்றும் வரலாற்று நிகழ்வுகளை உலகிற்கு கொண்டு சென்று சாட்சி அளிக்குவது தமிழர்களின் கடமையாகும்.
சுயநிர்ணய உரிமை மற்றும் எதிர்கால இலட்சியம் வடக்கு மற்றும் கிழக்கு தமிழர் பிரதேசங்களில் தாங்களே நிர்ணயிக்கும் சுயநிர்ணய உரிமை வேண்டும்.
அத்துடன், பொருளாதாரம், பாதுகாப்பு மற்றும் சமூக ஒற்றுமை தமிழர்களால் நிர்ணயிக்கப்பட வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
உயில் கிடைத்தவுடன் மீண்டும் வீட்டிற்குள் வந்த அய்யனார் துணை குடும்பம்.. அடுத்து நடக்கப்போகும் விஷயம் இதுதான் Cineulagam