ஹொங்கொங்கில் அறிமுகம் செய்யப்பட்ட பேசும் குப்பைத் தொட்டி
மக்கள் தங்கள் குப்பைகளை அப்புறப்படுத்துவதை ஊக்குவிக்கும் தனித்துவமான அணுகுமுறை ஒன்று ஹொங்கொங்கில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் பேசும் குப்பைத் தொட்டி ஒன்று அந்த நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த குப்பைத் தொட்டியோ அங்குமிங்கும் நகர்ந்து, குப்பைகளை என்னிடம் கொடுக்கும்படி தனித்துவமான பாணியில், மக்களிடம் கேட்கிறது.
ஆக்கப்பூர்வமான முயற்சி
“நான் குப்பையைச் சாப்பிட விரும்புகிறேன்” என குப்பை தொட்டி கூறுவதாக தெரிவிக்கப்படுகிறது.
குப்பையை போட்டவுடன் “ஆ, என்ன சுவையாக இருக்கிறது” என குப்பைத் தொட்டி மகிழ்ச்சியுடன் பதிலளிப்பதாக கூறப்படுகிறது.
மக்கள் தங்கள் குப்பைகளை அப்புறப்படுத்த ஊக்குவிப்பதே இதன் முதன்மையான குறிக்கோளாக இருந்தாலும், இந்த குப்பைத் தொட்டி பலருக்கு பொழுதுபோக்கு சின்னமாகவும் மாறியுள்ளது.
மேலும், இன்ஸ்டாகிராம் பயனர்கள் இதனை ஆக்கப்பூர்வமான முயற்சி என பாராட்டி வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |