இந்தியாவின் இணையம் மூலமான பயிற்சியில் தலிபான் பிரதிநிதிகள்!
இந்திய அரச நிறுவனம் ஒன்று இன்று முதல் நடத்தும் இணையம் மூலமான நான்கு நாள் பயிற்சியில் ஆச்சரியப்படத்தக்க வகையில் ஆப்கானிஸ்தானின் தலிபான் பிரதிநிதிகளும் பங்கேற்கின்றனர்.
'இந்திய சிந்தனைகளுடன் மூழ்குவது' என்ற தலைப்பில் இடம்பெறும் இந்த நான்கு நாள் பயிற்சிக்கான அழைப்பிதழ், இந்த வெளிவிவகார அமைச்சினால் அனுப்பப்பட்டுள்ளது.
அங்கீகரிக்கப்படாத தலிபான்களின் ஆட்சி

ஆட்சி அங்கீகரிக்கப்படாமல் இருக்கும் ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான்களுடன் இந்தியா ஈடுபாட்டை கொள்ளும் மற்றொரு படியாக இந்த நிகழ்வு அமைவதாக இந்திய ஊடகம் ஒன்று கூறுகிறது.
இந்த இணைய பயிற்சியில் பல நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளும் கலந்து கொள்கின்றனர்.
இந்த பயிற்சியின்போது, வெளிநாட்டு அதிகாரிகள் மற்றும் நிர்வாகிகள் இந்தியா
தொடர்பான ஆழமான புரிதலைப் பெற உதவும் என்று பயிற்சி ஏற்பாட்டாளர்கள்
தெரிவித்துள்ளனர்.
உலகின் எந்த சக்தியாலும் கொல்ல முடியாத தளபதிகளில் ஒருவர்... மரணத் தண்டனையை நிறைவேற்றிய ஈரான் News Lankasri
சன் டிவியில் ஞாயிற்றுக்கிழமை அன்று ஒளிபரப்பாகும் மூன்று திரைப்படங்கள்.. TRP பிச்சுக்கப்போகுது Cineulagam
எஞ்சிய ஆறு வெடிகுண்டுகள்... ஈரான் போருக்கு நடுவே ட்ரம்பிற்கு பறந்த அந்த அதிர்ச்சி தகவல் News Lankasri