இசையை வெறுக்கும் தாலிபான்கள்! இசைக்கருவியை சிரிப்பொலியுடன் எரிக்கும் காணொளி!
தாலிபான்கள், இசையமைப்பாளர் ஒருவரின் இசைக்கருவிகளை நடு வீதியில் தீயிட்ட காணொளி தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.
தலீபான்கள் ஆட்சி நடைபெற்று வரும் ஆப்கானிஸ்தானில் கடுமையான சட்டங்கள் நடைமுறையில் உள்ளன.
பெண்களுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பல்வேறு சமூக, கலாச்சார கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.
இசையும் பல்வேறு இடங்களில் தடை செய்யப்பட்டுள்ளது.
வாகனங்களில் செல்வோர் இசையை கேட்க முடியாது. திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் இசை வாத்தியங்களை ஒலிக்கவும் தலிபான்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையிலேயே உள்ளூர் இசையமைப்பாளர் ஒருவரின் இசைக்கருவிகளை வீதியில் தீயிட்ட காணொளி தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.
தமது இசைக்கருவி எரிக்கப்படுவதைக் கண்டு அந்த இசையமைப்பாளர் அழுகிறார்.
ஆனால் தலிபான்கள் அவரின் நிலையை கண்டு சிரிக்கின்றனர்.
Video : Taliban burn musician's musical instrument as local musicians weeps. This incident happened in #ZazaiArub District #Paktia Province #Afghanistan . pic.twitter.com/zzCp0POeKl
— Abdulhaq Omeri (@AbdulhaqOmeri) January 15, 2022
உலகக் கோப்பை நடுவர் செய்த சைகை., FIFA-விற்கு இனவெறி கண்காணிப்பு அமைப்பு விடுத்த கோரிக்கை News Lankasri
முதலமைச்சர் மகனை திருமணம் செய்துகொண்ட நடிகை.. 11 நாட்களில் இறந்த கணவர்! இவர் வாழ்க்கையில் இவ்வளவு சோகமா Cineulagam