ஆப்கானிஸ்தானில் செஸ் விளையாட்டுக்கு தடை : தலிபான் விடுத்த உத்தரவு
ஆப்கானிஸ்தானில் செஸ் (சதுரங்கம்) விளையாடுவதற்கும் அது தொடர்பான அனைத்து நடவடிக்கைகளுக்கும் தலிபான் அரசு காலவரையற்ற தடை விதித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதுகுறித்து அரசாங்க விளையாட்டுத் துறை செய்தித் தொடர்பாள அடல் மஷ்வானி கூறுகையில், இஸ்லாமிய சட்டத்தின் கீழ் சதுரங்கம் சூதாட்டத்தின் ஒரு வடிவமாகக் கருதப்படுகிறது.
சதுரங்க ஆர்வலர்கள் மத்தியில்....
இது நாட்டின் "நன்மையை ஊக்குவித்தல் மற்றும் தீமையைத் தடுப்பதற்கான சட்டத்தின்" படி தடைசெய்யப்பட்டுள்ளது. சதுரங்கத்திற்கு மத ரீதியான ஆட்சேபனைகள் உள்ளன.
இந்த ஆட்சேபனைகள் தீர்க்கப்படும் வரை, ஆப்கானிஸ்தானில் இந்த விளையாட்டு நிறுத்தி வைக்கப்படும் என்று கூறியுள்ளார்.
எனினும், இந்த முடிவு சதுரங்க ஆர்வலர்கள் மற்றும் தொடர்புடைய வணிகங்கள் மத்தியில் ஏமாற்றத்தைத் தந்துள்ளது.
முன்னதாக பெண்கள் விளையாட்டுகளில் பங்கேற்கத் தலிபான் அரசு தடை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |