பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றி வாகை சூடியது இங்கிலாந்து! (Video)
புதிய இணைப்பு
எட்டாவது ஐசிசி இருபதுக்கு 20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரை இங்கிலாந்து அணி வெற்றிகொண்டது.
இன்றைய இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியை 5 விக்கெட்டுக்களால் வீழ்த்தி இங்கிலாந்து அணி வெற்றி வாகை சூடியது.
முதலாம் இணைப்பு
டி20 உலகக் கிண்ண இறுதிப் போட்டி, மெல்பர்ன் கிரிக்கெட் விளையாட்டரங்கள் தற்சமயம் இடம்பெற்று வருகின்றது.
பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதுகின்ற இந்த போட்டியில், இங்கிலாந்துக்கு 138 ஓட்டங்களை வெற்றி இலக்காக பாகிஸ்தான் நிர்ணயித்துள்ளது.
முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 137 ஓட்டங்களைப் பெற்றது.
வெற்றி இலக்கு
முதலில், களத்தடுப்பில் ஈடுபட்ட இங்கிலாந்துக்கு ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை.
20 ஓவர்கள் நிறைவில் பாகிஸ்தான் 8 விக்கெட்களை இழந்து 137 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
சிறப்பாக பந்துவீசிய சாம் கரன் 4 ஓவர்களில் 12 ஓட்டங்களை மாத்திரம் கொடுத்து 3 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
கிறிஸ் ஜொர்டன் 27 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
இந்தநிலையில், இங்கிலாந்துக்கு வெற்றி இலக்காக 138 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்? News Lankasri

அய்யனார் துணை சீரியல் நடிகர் சோழனுக்கு நிஜ வாழ்க்கையில் இப்படியொரு சோகமா?... கண்ணீரில் அரங்கம், வீடியோ Cineulagam

கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் வழுக்கி விழுந்த தமிழ், பதறி அடித்து ஓடிய சேது... சின்ன மருமகள் பரபரப்பு புரொமோ Cineulagam
