சுவிற்சர்லாந்தில் திருக்கோவில்களின் ஒன்றியம் (Photos)

Switzerland
By DiasA Jan 09, 2023 06:50 PM GMT
Report

இந்து சைவத் திருக்கோவில்களின் ஒன்றியம்- சுவிற்சர்லாந்து  எனும் பெயரில் சுவிற்சர்லாந்து பொதுச்சட்டம் சரத்து 60 இற்கு அமைவாக 28.05.2017 திருக்கோவில் ஒன்றியம் நிறுவப்பட்டது.

இவ் ஒன்றியம் சுவிற்சர்லாந்தின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள இந்து-சைவப் பொது- மற்றும் சமூக அமைப்புக்களை ஒன்றிணைக்கும் பெரும் பணியினை ஆற்றி வருகின்றது.

சுவிற்சர்லாந்தில் ஈழத்தமிழர்களால் தோற்றுவிக்கப்பட்ட 24 திருக்கோவில்கள் இயங்கி வருகின்றன. இவை அனைத்தும் சுவிற்சர்லாந்தில் மன்றங்களாகவே பதிவுசெய்யப்பட்டு செயற்பட்டு வருகின்றன.

பொதுமக்களின் உடல் உழைப்பிலும் கொடையிலும் மட்டுமே கோவில்கள் தம் தொண்டினை ஆற்றி வருகின்றன. கடந்த மகுடநுண்ணிப் பெருந்தொற்றுக்காலம் சுவிற்சர்லாந்தின் கோவில்களுக்கும் பெரும் சாவாலான காலமாககே அமைந்திருந்தது.

சுவிற்சர்லாந்தில் திருக்கோவில்களின் ஒன்றியம் (Photos) | Switzerland Tamil People Temples

சட்ட விதிமுறைகளைக் கோவில்கள் ஒழுகி உரிய நலவாழ்வு நடைமுறைகளைக் கடைப்பிடித்து கோவில்கள் தம் தொண்டினை நெருக்கடியான காலங்களிலும் ஆற்ற திருக்கோவில் ஒன்றியம் பெரும் உழைப்பினை வழங்கி இருந்தது.

நடுவனரசுடனும் மாநில அரசுகளுடனும் தொடர்புகளைப்பேணி உரிய செயற்பாடுகளை நெறிப்படுத்தியதும் கடந்தகாலத்தில் திருக்கோவில் ஒன்றியம் ஆற்றிய பெரும் பணியாகும்.

கோவில் மன்றங்கள் தத்தமது பணிகளை தனித்துவமாக மன்றத்தன்னாட்சியுடன் முன்னெடுத்தாலும் ஈழத்தமிழர்களாக இந்து-சைவ மக்களாக இணக்கத்துடன் பொது நன்நோக்கிற்கு ஒன்றுபட்டு தொண்டாற்ற ஒன்றியம் நடுவமாக இயங்கி வருகின்றது.

ஆற்றுப்படுத்தல் (Spiritual Care) கல்வி, ஊடாட்டகர் (Intercultural Mediation) கற்கை, மன்றங்களை நெறிப்படும் முகாமைத்துக் கல்வியினை (Law of associations/ Management and leadership) திருக்கோவில் மன்றங்களுக்கு வழங்குவதற்கு உரிய ஏற்பாடுகளை திருக்கோவில் ஒன்றியம் 2023ல் முன்னெடுக்க உள்ளது.

சுவிற்சர்லாந்தில் திருக்கோவில்களின் ஒன்றியம் (Photos) | Switzerland Tamil People Temples

குறிக்கோள் மற்றும் நோக்கம்

இவ் ஒன்றியத்தின் நோக்கம் இந்து சமயத்தினை வளர்ப்பதையும், நடைமுறையில் வாழத்துணையாகவும் அதுபோல் இந்துக்கோவில் மன்றங்களை, இந்துப்பொது- மற்றும் சமூக அமைப்புக்களை மேலும் இந்து சமயத்தில் இறையன்புகொண்டோரை ஒன்றிணைப்பதும் ஆகும்.

செயற்பாடுகள்

உள்ளூர் மற்றும் தேசிய அதிகாரிகள், ஊடகங்கள் முன்னிலையில் எமது தேவைகளை – விருப்புக்களை முன்னிறுத்தல் உறுப்பினர்களை ஒருங்கிணைத்தல் மற்றும் தேர்ச்சியினை (அனுபவத்தினை) பரிமாறுதல், ஏனைய சைவத்தமிழ் அமைப்புக்களுடன் எமது தொடர்புகளைப் பேணுதல் இந்து-சைவ சமயக் கற்கை மற்றும் மேற்கல்விக்கான வாய்ப்புக்களை ஊக்குவித்தல் கூரையமைப்பு அதன் உறுப்பினர்கள் அனைவரும், அனைவரினதும் முன்னிலையில் இந்துசமயம் சைவநெறி குறித்த ஒரு சீரானதோற்றத்தை ஏற்படுத்த வழிசெய்வது என்பதும் இத்திருக்கோவில் ஒன்றியத்தின் நோக்கமாகும்.

2023ல் புதிய நிர்வாகம்

கடந்த 08.01.2023 ஞாயிற்றுக்கிழமை பேர்ன் மாநிலத்தில் அமைந்துள்ள அருள்ஞானமிகு ஞானலிங்குச்சுரர் திருக்கோவிலில் கூட்டு வழிபாட்டுடன் திருக்கோவில் ஒன்றியப்பொதுக்கூட்டம் நடைபெற்றது.

சுவிற்சர்லாந்தில் திருக்கோவில்களின் ஒன்றியம் (Photos) | Switzerland Tamil People Temples

ஒன்றியப்பொதுக்கூட்டத்தில புதிய நிர்வாகத்தெரிவு இடம்பெற்றது. இதன்போது புதிய நிரவாகிகள் தமது பொறுப்பினை உடன் ஏற்றுக்கொண்டனர். சிவருசி தர்மலிங்கம் சசிக்குமார் நிறைவில் நன்றிநவின்றார். “திருக்கோவில் ஒன்றியத்தின் நோக்கம் கோவில்கள் வழிபாட்டுடனும் சமயச்சடங்குகளுடனும் மட்டும் நின்றுவிடாமல் தமிழ்ச் சமூகத்திற்கு தேவையான சமூகப்பணிகளை இங்கும் தாயகத்திலும் மேற்கொள்ளவேண்டும்.

கோவில்கள் தமது உறுப்பினர்களுக்கு உரிய கல்வவளத்தினையும் துறைசார் தகையினையும் ஊட்டி அதன்பால் நிறைபணிகள் மேற்கொள்ள வேண்டும். அதற்கு திருக்கோவில் ஒன்றியம் அனைவரையும் இணக்கத்துடன் அணுகிப் பயணத்தைத் தொடரவேண்டும் ” எனும் வேண்டுகைவைத்து நன்றியுரையினை நிறைவுசெய்தார்.

சுவிற்சர்லாந்து நாட்டில் சைவத்தமிழ் மக்களது நலன் முழுமையாகப் பேணப்படுவதற்கு ஒன்றியம் தொடர்ந்து செயற்படும், கோவில்கள் அமைந்திருக்கும் ஊராட்சி மன்றங்களிலும், மாநிலத்திலும், சுவிற்சர்லாந்து நடுவனரசிடத்திலும் நற்தொடர்டால் செம்மையுற ஒன்றியம் தொடர்ந்து உழைக்கும் எனப் புதிய நிர்வாகத்தினர் நம்பிக்கை வெளியிட்டனர். 

மரண அறிவித்தல்

நீர்வேலி தெற்கு, Toronto, Canada

02 Dec, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 5ம் வட்டாரம், நயினாதீவு 2ம் வட்டாரம், Toronto, Canada, Montreal, Canada, London, United Kingdom

04 Dec, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சாவகச்சேரி, வவுனியா, சென்னை, India

29 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், Montreal, Canada

11 Dec, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, திருகோணமலை, Richmond Hill, Canada

11 Dec, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, நவாலி, சங்குவேலி, Toronto, Canada

10 Dec, 2024
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Chennai, India

07 Dec, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, Toronto, Canada

11 Dec, 2022
4ம், 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், முள்ளியவளை

11 Dec, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொல்லன்கலட்டி, Stryn, Norway, Tromso, Norway

10 Dec, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொழும்பு

10 Dec, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைப்பந்தி, London, United Kingdom

22 Nov, 2024
மரண அறிவித்தல்

இயற்றாலை, Wellingborough, United Kingdom

07 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வவுனியா, Toronto, Canada

11 Dec, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய், Lingenfeld, Germany

08 Dec, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், வவுனியா, பூந்தோட்டம்

07 Dec, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, Hannover, Germany

03 Dec, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Vaughan, Canada

12 Dec, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய், ஜெனோவா, Italy

08 Dec, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saint-Louis, France

09 Dec, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, நெல்லியடி வடக்கு

02 Dec, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

09 Dec, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
12ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, கட்டுடை, Cornwall, United Kingdom

08 Dec, 2020
40ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கோப்பாய்

04 Dec, 1985
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US