வெனிசுலாவின் ஜனாதிபதியின் சொத்துக்களை முடக்கிய சுவிட்சர்லாந்து
வெனிசுலாவின் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவருடன் தொடர்புடைய நபர்களின் சொத்துக்களை சுவிட்சர்லாந்து அரசாங்கம் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் முடக்கியுள்ளது.
மதுரோ அமெரிக்காவினால் கைது செய்யப்பட்டு நியூயோர்க் நீதிமன்றத்துக்கு அழைத்துவரப்பட்டுள்ள நிலையில், சுவிட்சர்லாந்து இந்த முடிவை எடுத்துள்ளது.
தற்போது வெனிசுலாவில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்களுக்கு மத்தியில், மதுரோ மற்றும் அவரது நெருங்கிய சகாக்கள் தங்கள் சொத்துக்களை நாட்டிற்கு வெளியே கடத்துவதைத் தடுப்பதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கமாகும்.
சொத்து முடக்கம்
இந்தச் சொத்து முடக்கம் இன்று(5.1.2026) முதல் அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு நடைமுறைக்கு வரும் வகையில் இருக்கும் என சுவிஸ் மத்திய பேரவை அறிவித்துள்ளது.

இந்தச் சொத்துக்கள் சட்டவிரோதமான முறையில் ஈட்டப்பட்டவை என்பது எதிர்கால சட்ட நடவடிக்கைகளின் மூலம் நிரூபிக்கப்பட்டால், அந்தப் பணத்தை மீண்டும் வெனிசுலா மக்களிடமே ஒப்படைக்க சுவிட்சர்லாந்து முயற்சிக்கும் என அந்தநாட்டு அரசாங்கம் உறுதியளித்துள்ளது.
மதுரோவின் சொத்துக்கள் குறித்து சுவிட்சர்லாந்து வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை என்றாலும், கடந்த 2021-ஆம் ஆண்டு வெளியான ஒரு விசாரணை அறிக்கையின்படி சுவிஸ் வங்கிகளில் வெனிசுவேலாவின் பொதுப்பணத்திலிருந்து கொள்ளையடிக்கப்பட்டதாக கூறப்படும் சுமார் 10 பில்லியன் டொலர் பணம் இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இஸ்ரேல் ஏடன் வளைகுடாவில் திறந்துள்ள மூலோபாயம் முன்னரங்கு 14 மணி நேரம் முன்
போதுமான உணவு, மருந்துகளை சேமித்து வைத்துக்கொள்ளுங்கள்... பிரித்தானிய மக்களுக்கு ஆலோசனை News Lankasri