மேற்கு கடற்கரையில் ஒதுங்கிய மர்ம பொதி.. தீவிர விசாரணையில் STF அதிகாரிகள்
களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கட்டுகுருந்த கடற்கரையில் இன்று (05) காலை போதைப்பொருள் என சந்தேகிக்கப்படும் ஒரு பொதி கண்டெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த கடற்கரையில் சுமார் 10 கிலோகிராம் எடையுள்ள ஒரு பொதியே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
மர்ம பொதி..
இதனை தொடர்ந்து, அருகிலுள்ள சுற்றுலா விடுதியின் ஊழியர்கள் அதைக் கவனித்து பாதுகாப்புப் படையினருக்குத் தகவல் அளித்துள்ளனர்.

அதன் பின்னர் பொலிஸ் சிறப்பு அதிரடிப்படையினர் வந்து மேலதிக விசாரணைக்காக பொதியை எடுத்துச் சென்றுள்ளனர்.
இந்தப் பொதி கடலில் மிதந்ததா அல்லது யாராவது வந்து இந்த இடத்தில் விட்டுச் சென்றனரா என்பது குறித்து களுத்துறை கட்டுகுருந்த பொலிஸ் சிறப்புப் படையினரும் களுத்துறை தெற்கு பொலிஸாரும் விசாரணை நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |