மூத்த சட்டத்தரணி ஒருவரை பணி இடைநீக்கம் செய்த சட்டமா அதிபர் திணைக்களம்
மூத்த அரச சட்டத்தரணியான சவீந்திர விக்ரமவை சட்டமா அதிபர் திணைக்களம்(Attorney General's Department) பணி இடைநிறுத்தம் செய்துள்ளது.
விக்கிரம தனது மேலதிகாரிகளின் உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டின் பேரில் இடைநிறுத்தப்பட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அதிகாரி, சட்டமா திணைக்களப் பிரிவில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றியவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுச்சேவைகள் ஆணைக்குழு
இந்தநிலையில் அவரின் இடைநிறுத்தத்துக்கு பொதுச்சேவைகள் ஆணைக்குழுவும், ஒப்புதல் அளித்துள்ளது.

இதற்கிடையில் அவர் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக சட்டமா அதிபர் திணைக்களம் விசாரணைகளை நடத்த உள்ளது.
இதேவேளை சட்டமா அதிபர் திணைக்களம் தொடர்பில,லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு மற்றும் கெசல்வத்தை பொலிஸில், சட்டத்தரணி விக்ரம இரண்டு முறைப்பாடுகளையும் செய்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
முறையான கழிப்பறைகள் இல்லாத நாடு... விமர்சித்த கேற்றி ஸக்கரியாவுக்கு பதிலடி கொடுத்த சீனா News Lankasri
Switzerland Plus ஒப்பந்தம் மூலம் பிரித்தானியா மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர திட்டம் News Lankasri
Bigg Boss 10: டிடிஎஃப் வாசன் ஆடிய ஆட்டம்... கோட்டை விட்ட போட்டியாளர்கள்! விஜய்சேதுபதி கூறியது என்ன? Manithan