பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது
கடந்த சில காலமாக பொலிஸாரிடம் இருந்து தலைமறைவாகி இருந்து வந்த, பல்வேறு விதமான குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 27ஆம் திகதி கண்ணகி நகர் பகுதியில் வீதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் பெண் ஒருவர் அணிந்திருந்த தாலி கொடியினை அறுத்து தப்பிச்செல்ல முற்பட்டவேளை இரண்டு திருடர்களின் ஒருவரது தொலைபேசி அந்தப் பெண்ணிடம் அகப்பட்டுள்ளது.
இருப்பினும், குறித்த சந்தேக நபர்கள் தாலிக்கொடியுடன் தப்பி சென்றுள்ள நிலையில் இச்சம்பவம் தொடர்பாக குறித்த பெண் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
சந்தேகநபரின் தொலைபேசி
இதற்கமைவாகவும், பெண் கையளித்த தொலைபேசியில் உள்ள விபரங்களுக்கு அமைவாகவும் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் பெண்ணிடமிருந்து அபகரிக்கப்பட்ட தாலியும்,1 தொலைக்காட்சி பெட்டி, 01 கைத்தொலைபேசி மற்றும் ஆறு 06 தண்ணீர் பம்பிகள் என்பன பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
அதேவேளை, சம்பவத்துடன் தொடர்புடைய மற்றும் ஒரு சந்தேக நபர் தலைமறைவாகியுள்ளார். இந்நிலையில், தலைமாறவாகி உள்ள சந்தேக நபரை செய்யும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டு வருவதுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் அன்று கிளிநொச்சி நீதிமன்றம் முட்படுத்தப்பட்ட நீதவானின் உத்தரவுக்கு அமைவாக 14 நாட்கள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
தற்பொழுது தருமபுர பொலிஸ் நிலையத்தில் தொலைபேசி மற்றும் தொலைக்காட்சி பெட்டி நீர் பம்பி என்பனவற்றை தொலைத்தவர்கள் தருமபுர பொலிஸ் நிலையத்தில் தொடர்பு கொள்ளுமாறு தருமபுர பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி.எம். சதுரங்க தெரிவித்துள்ளார்.
தர்மபுரம் பொலிஸ் பிரிவு மற்றும் புதுகுடியிருப்பு பொலிஸ் பிரிவுகளில் களவாடப்பட்ட பொருட்கள் தற்போது மீட்கப்பட்டுள்ளன.








ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

சரிகமப சீசன் 5 போட்டியாளர்களுக்கு மாபெரும் பரிசுத் தொகை அறிவிப்பு... இத்தனை லட்சத்தில் வீடா? Cineulagam

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri
